Sunday, 23 March 2014

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்.

கீதை முதல் அத்தியாயம்
அர்ஜுன விஷாத யோகம்
ஸ்லோகம் 42, 43, 44 ல்
வர்ணக்கலப்பு குலநாசம் செய்தவர்களையும் குலத்தையும் நரகத்திற்கே அழைத்துச் செல்லக் கூடியது.  இவர்களுடைய முன்னோர்கள் கூட பிண்டம், நீர்க்கடன் அதாவது சிராத்தம், தர்ப்பணம் – இவற்றை இழந்து வீழ்ச்சி அடைவார்கள்.

குலநாசம் செய்பவர்களின் இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களினால், தொன்று தொட்டு வருகிண்ற குலதர்மங்களும் ஜாதி தர்மங்களும் அழிந்துவிடுன்றன.

ஜனார்தனா ! குலதர்மங்கள் அடியோடு அழிந்து விட்டபின் மனிதர்களுக்கு அளவற்ற காலம் வரை நரகவாசம் ஏற்படுகிறது என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.
இதற்க்கு மாறுபட்ட கருத்து கீழே வருகிறது
ஸ்ரீ மத் பாகவததில்
பத்தாம் ஸ்கந்தம் 
இரண்டாம் பகுதியில்
நரகாசுர வத்தில் நரகாசுரனை வதத்க்குப் பிறகு பதினராயிரம் பெண்களை மணந்தார் என்று வருகிறது.
இந்த பதினராயிரம் பெண்களும் அரக்கனால் பல நாடுகளிருந்து கடதிவரப்பட்டு சிறை வைக்கப்பட்ட இராஜகுமாரிகள்.
தற்போது எனது சந்தேகம் இந்த பதினராயிரம் பெண்களும் ஒரே குலத்தை சேர்ந்தவர்களாக இருபார்களா அல்லது வர்ணக்கலப்பு இருக்குமா ?
எனவே எனது அனுமானம் இந்த காவியங்களை எழுதிய முனிவர்களின் தனிப்பட்ட மனித குணங்களின் பாதிப்பாக இருக்கும்.
மேலும் எல்லா மத தத்துவங்களும் பொதுவாக எல்லா வயது, அறிவு, வாழ்க்கை தரம், பரிபக்குவம், ஞான முதிர்ச்சி சேர்த்தே எழுதி வைத்திருக்கின்றனர் என்றே நினைக்கிறேன்.
தேவகுணத்தை  விரும்புகிரவர்கள் அதையும். அசுரகுணத்தை விரும்புகிரவர்கள்  அதையும் எடுத்துக்கொள்வர்கள்.




1 comment: