Monday, 24 March 2014

பூவை செங்குட்டுவன் அவர்களின் இனிமையான, பாடல். இப்படி ஒரு மனைவி அமைந்தால் கொடுத்துவைதர்கள்

இவை பாடல் வரிகள்.  அர்த்தத்துடன் படிக்க 

மேலும்

படிக்கப் போருமையள்ளதவர்களுக்கு.

https://www.youtube.com/watch?v=karD1Q_p-1s

இனி பாடலை படித்துப் பாருங்கள்.

தலைவன்
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்

தலைவன்
பொன்னூஞ்சல் இல்லை
பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே 
தலைவி
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூமெத்தை தானே தந்தை மனம்
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூமெத்தை தானே தந்தை மனம்
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா
மஞ்சமடா… மஞ்சமடா !

காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்

தலைவன்
செல்ல‌மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள்
ஏழையுடன் வந்தாளடா

தலைவி
ஸ்ரீராம‌ன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு
பெருமைகள் வேறேத‌டா

தலைவன்
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌
பெத்தம‌ன‌ம் பித்தாக‌ பேதைம‌ன‌ம் க‌ல்லாக‌
த‌ன் சொந்த‌ம் வெறுத்தாளடா
தந்தை ம‌ன‌ம் த‌வித்திருக்க‌

தலைவி

ப‌ர‌ம‌னுட‌ன் துணை நின்ற‌
பார்வ‌தியும் பெண்தானடா



தலைவன்
த‌னிம‌ர‌மாய் நின்ற‌வ‌னை
த‌ழுவுகின்ற‌ பூங்கொடியாள்
சுக‌மென்ன‌ க‌ண்டாள‌டா
கொடியுண்டு மரமுண்டு

தலைவி
குழ‌ந்தையெனும் க‌னியுண்டு
குறையென்ன‌ க‌ண்டேன‌டா
உன‌த‌ன்னை துய‌ர்த‌ன்னை
தலைவன்
நான் தீர்க்கும் முன்னாலே
உன்க‌வலை கொண்டேன‌டா
க‌ண்ண‌னாக‌ நீயிருக்க‌ ம‌ன்ன‌னாக‌ அவ‌ர் இருக்க‌
க‌வ‌லைக‌ள் என‌க்கேத‌டா 

காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன் 


பாடல்: பூவை செங்குட்டுவன்


No comments:

Post a Comment