Sunday, 9 March 2014

கண்ணதாசனுக்கு எதிரில் கடை விரிப்பது என்றல் சும்மாவா

சிலநேரங்களில் சில மனிதர்கள் - படத்துக்காக வாலி எழுதியபாடல். பாரதி அளவுக்கு கனமான வரிகலாகத் தோன்றுகின்றது 

-------------

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்

இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ


வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
தாங்கிட நாதியுண்டோ


கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ

2 comments:

  1. Intha padalai iyatriyavar eluthalar Jayakanthaan

    ReplyDelete
  2. This song is written by Jeyakanthan!!

    ReplyDelete