Saturday, 26 October 2013

வட ஆறு திரும்புமா




தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களு
 — with Riyaz Deen.

Tuesday, 22 October 2013

நிலக்கரி உழல் குற்றச்சாட்டுக்கும் பொருந்தும்


ஆரசியல் வாதிகள் IAS அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள்,அரசாங்க அதிகாரிகள்,  ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் செய்யாமுடியது.  எனவே இனி ஒவ்வொருமுறை ஆரசியல் வாதிகள் ஊழலுக்கு தண்டனை பெறும்போது சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு 3 மடங்கு தண்டனை என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது.

இதிலிருந்து என்ன தெரிகிறது எல்லா காலத்திலும் அரசியல்வாதிகள் மண்ணில் பொன்னைப் பார்கிறார்கள்.

1923 ல் பிட்டி தியாகராயசெட்டி ஜெஸ்டிஸ் கட்சியை சேர்ந்தவர் பிளாட் போட்டு உருவாக்கியதுதான் சென்னை தியாகராய நகர alias T. Nagar.  இதிலிருந்து என்ன தெரிகிறது எல்லா காலத்திலும் அரசியல்வாதிகள் மண்ணில் பொன்னைப் பார்கிறார்கள்.


அடுத்த ஆட்சி வந்தவுடன் அவர்மேல் தற்போது நடப்பதுபோல் சொத்து வழக்கு நடந்ததோ என்னவோ. தெரிந்திருந்தால் தகவல் சொல்லுங்களேன்

பகுத்தறிவும் ஒழுக்கநெறிம்


பகுத்தறிவு தர்க்கம் சார்ந்தது. ஒழுக்கம் என்பது உறுதியான நம்பிக்கைகளால் ஆனது. ஆகவே, பகுத்தறிவு பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை ஏற்காததாகவே இருக்க முடியும்.

ஒழுக்க நம்பிக்கை பகுத்தறிவுரீதியாக வந்தால்அது இன்னும் நிலையானதாக இருக்குமே. வெறும் நம்பிக்கையாக இருந்தால் எளிதில் கரையும் அல்லவா?’


நமக்கு அடிப்படையான கல்வியிலேயே பிரச்சினை இருக்கிறது. ஓர் ஆசிரியர் மேடையில் நின்று உரையாற்ற, மாணவர்கள் அதைத் தெரிந்துகொள்ளும்வகையான கல்வியே இங்கே பிரிட்டிஷாரால் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தக் கல்விமுறை பிரிட்டனில் இருந்த ஜிம்னேசியங்கள் என்ற மதப் பாடசாலைகளில் இருந்து நகல் செய்யப்பட்டவை.
புரிந்துகொள்வதற்கான கல்வி என்பது, விவாதங்கள் மூலமே முன்னகர முடியும். இந்தியாவின் தொன்மையான குருகுல மரபுகளிலும் சரி, கிரேக்க மரபிலும் சரி; அதுவே ஒரே கல்விமுறைமையாக இருந்திருக்கிறது.
குறிப்பாக, எந்த ஒரு கருத்தையும் அதன் எதிர்த்தரப்பு வழியாக இன்னும் தெளிவாக்கிக்கொள்ள முடியும். இந்திய ஞானமரபில் சுபக்கம் பரபக்கம் என்று நேர்த் தரப்பும் எதிர்த் தரப்பும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவ்விரு தரப்புகள் நடுவே உள்ள மோதல் வழியாகவே எந்த ஒரு கருத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. மிக நுட்பமான, சிக்கலான வேதாந்தக் கருத்துகள் அவ்வகையில்தான் இங்கே உள்வாங்கிப் பயிலப்பட்டன.
ஆங்கில ஜிம்னேசியப் பாணி கல்விக்காக நாம் நம்முடைய மரபான கல்விமுறையை மறந்தோம். ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த ஜிம்னேசியக் கல்விமுறையை 50 ஆண்டுகள் முன்னாலேயே உதறி, விவாதித்துக் கற்கும் கல்விமுறைக்குச் சென்றன.

எனக்குத் தெரிந்து இதை வெல்ல ஒரே ஒரு வழி உள்ளது. கல்விநிலையப் பாடத்திட்டத்துக்கு வெளியே நூல்களை வாசிக்கும் வழக்கத்தை மேற்கொள்வது. எந்தத் துறையிலும் மிகச் சிறந்த நூல்கள், மிக எளிய நூல்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன. வாசிக்கும் மனநிலை மட்டும் இருந்தால் போதும். அவற்றை முறையாக விவாதித்துப் புரிந்துகொள்ள முயன்றால் போதும்.

தி இந்து 20/10/2013
நன்றி  ஜெயமோகன்எழுத்தாளர் - தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

Monday, 21 October 2013

சே குவேரா பற்றி தற்போது தெரிந்துகொண்டேன்

சே குவேரா மட்டும்தான் நாடுகளைக் கடந்து போராடிய புரட்சியாளன். அர்ஜென்டினாவில் பிறந்து கியூபா விடுதலையில் பங்கேற்று பொலிவிய சுதந்திரத்துக்காகப் போராடியபோது சுட்டுக் கொல்லப்பட்டவர் சே. எல்லாப் புரட்சியாளர்களும் தங்களது நாட்டு எல்லைக்குள் தங்கள் நாட்டுக்காக மட்டும் போராடினார்கள். ஆனால் சே, நாட்டு எல்லைகளைக் கடந்தவர். பலவீனமான கால்கள், களைத்துப் போன நுரையீரல் கொண்ட சே, தனது மனவலிமையை மட்டுமே நம்பிப் புரட்சிக்களத்தில் இருந்தார். பிற புரட்சியாளர்கள் தங்களது லட்சியத்தை அடைந்ததும் அல்லது சம்பந்தப்பட்ட நாட்டின் அதிபர் ஆனதும் அமைதி யாகிவிடுவார்கள். ஆனால் கியூபா-வின் விடுதலைக்குப் பிறகு அந்த நாட்டின் தேசிய வங்கித் தலைவராக, ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போடும் தகுதி படைத்தவராக, அதன்பிறகு தொழில் துறை அமைச்சராக இருந்த சே, அந்தப் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் ஒரு போரளியாக மாறி கெய்ரோ வழியாக காங்கோவுக்குள் போனது வரலாற்று அதிசயம். அதனால்தான் அவர் இன்றும் இளைஞர்களை ஈர்க்கும் புரட்சியாளராக இருக்கிறார்.

Wednesday, 16 October 2013

முதலீட்டு ஆலோசகர்களும் cousin Brothers ம்

பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகர்களின் பரிந்துரைகளைக் கேலி செய்யும் விதத்தில் பர்டன் மால்கீல் என்ற பொருளாதார அறிஞர் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார்.

குரங்கின் கண்ணைக் கட்டிவிட்டு, அதன் கையில் சில வீச்சு அம்புகளைக் கொடுத்து, பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய பலகை மீது வீசச் சொன்னால்,

முதலீட்டு ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் நிறுவனங்களாகவே அவையும் இருப்பதைக் காணலாம் என்கிறார்.

அதாவது, நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கு புத்திசாலித்தனமோ அனுபவமோ தேவையில்லை என்கிறார். 

அவர் சொன்னது சரிதானா என்று சரிபார்க்க உண்மையிலேயே ஒரு குரங்கின் கையில் வீச்சம்புகளைக் கொடுத்து வீச வைத்தும் பார்த்திருக்கிறார்கள். பர்டன் மால்கீல் கூறியது சரிதான் என்று தெரிந்துகொண்டனர்!

50 வயதில் எல்லோருக்கும் புரியும்


Friday, 11 October 2013

பார்த்தசாரதி


Sunday, 6 October 2013

சைனா (மேலோட்டமாக படிக்க கலர் எழுத்துக்களை மட்டும் படிக்கலாம்)

சீனரின் பட்டு உற்பத்தியானது மிக முக்கியமான சாதனை.
சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.
இந்தச் சூழலில் ஜப்பானியர்கள் வெகு சாமர்த்தியமாகபட்டு நூல் வளர்க்கத் தெரிந்தநான்கு சீனப் பெண்மணிகளைக் கடத்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஜப்பானியர்கள் அவர்கள் மூலமாகபட்டு நூல் வளர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப்பன்மடங்கு உற்பத்தி செய்யஆரம்பித்து விட்டார்களாம். ஆனால், சீனர்களுக்கு அபிவிருத்தி செய்யத் தெரிந்து இருக்கவில்லையாம்.அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

மட்பாண்டங்கள் பீங்கான்கள் தயாரிப்பில் சீன குவாங்கோ மக்கள் பிரசித்தி பெற்று விளங்கினர். இவர்கள் தமது தேவைகளுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் இவற்றை தயாரித்தனர்.
சீன மொழி எழுத்துக்கள் கி.மு.16ம் நூற்றாண்டின் தொகுதியான எழுத்துக்களாக உருவாகின.
சீன மொழி எழுத்துக்கள் உருவான பின் அண்டை நாடுகளில் அவை ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தின. ஜப்பான், வியட்நாம், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் எழுத்துக்கள் சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையில் உருவானவை.
காகித உட்பத்தி சீனரின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே.
ஆனால் கி.பி. 751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும், பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று, காகிதம் தயாரிக்கும் கலை படிப்படியாக அரபு உலகம் முழுவதிலும் பரவியது. ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்தக் கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். காகிதத்தில் பயன்பாடு உலகெங்கும் படிப்படியாகப் பரவியது.
11ஆம் நூற்றாண்டில் ச்சென் குவா (Shen Gua) எனும் புகழ்பெற்ற எழுத்தாளர் பை செங் (Bi Sheng) என்ற பெயர் கொண்ட ஒருவர் நகரும் அச்சுகளைக்கொண்டு அச்சிடும் கண்டுபிடிப்பு செய்தது பற்றி பதிவு செய்துள்ளார். இந்த படைப்பே இறுதியில் மேற்கு உலகம் தம் கையில் எடுத்துக்கொள்ள குட்டன்பர்க் என்பவரால் பைபிளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது.
பண்டைய சீன சிங் வம்சத்திற்கு (கி.மு 1644-1911) முன் சீனாவில் கண்ணாடி உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் சீனாவில் கண்ணாடி தயாரிப்பில் முந்தைய தொல்பொருள் ஆதாரம் பின்னர் வந்த சவ் அரசகுலத்திலிருந்து (கி.மு1046 221BC) வருகிறது. மட்பாண்டப்பொருள்கள் மற்றும் உலோக வேலைப்பாடுகளை ஒப்பிடும் போது சீன வரலாற்றில் கண்ணாடி கலை மற்றும் கைவினை ஒரு பெரும் பங்கை பெற்றுள்ளது.
ஹான் திபெத் மங்கோலியா உள்ளிட வெவ்வேறு சீன இனக்குழுக்கள் பயன்படுத்தும் எல்லா மருந்துகளுக்கும் சீன மருத்துவம் என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இனக்குழுக்களிடையே ஹான் இனம் பயன்படுத்தும் மருந்துதான் சீனாவிலும் உலகம் முழுவதிலும் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது. ஹான் இனம் தான் முதன் முதலில் தனக்கென ஒரு மருத்துவ முறையை உருவாக்கியது. 19ம் நூற்றாண்டில் மேற்கத்திய மருத்தும் பிரபலமடைந்தது போல ஹான் மருத்துவம் கீழை நாடுகளில் பிரபலமானது. சீனாவின் தேசிய இனங்கள் உருவாக்கிய பல்வேறு மருத்துவ முறைகளில் ஹான் இனம் உருவாக்கிய மருத்துவ முறைதான் மிகவும் பழமையானது. நடைமுறைப் பயன்பாட்டிலும் கோட்பாட்டு அறிவிலும் வளம் மிக்கது.
சீனரின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக விளங்குவது அவர்களின் கட்டிடக்கலை ஆகும். சீனரின் கட்டிடக்கலை என்னும் போது சீனப்பெருஞ்சுவராகும்.கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர்.

சீனர்கள் சமய நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் பல தெய்வங்களை வணங்கினர் என்று கூற முடியது. அவர்கள் ஆதி காலம் தொட்டு தனிக்கடவுள் உண்டு என்ற கொள்கை கொண்டிருந்தனர். கி.மு 6ம் நூற்றாண்டில் கன்பூசிய மதமும் தேயோ மதமும் பரவின. பின்னர் இவ்விரு மதங்களும் செல்வாக்கு இழந்து பௌத்த மதம் வளர்ச்சி பெற்றது. சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றி பேசும் போது, ஒருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தான் கம்பியூசியஸ். சீன மக்களை பொறுத்தவரையில் கம்பியூசியஸின் செல்வாக்கு முதலிடம் வகிக்கின்றது. கம்பியூசியஸ் சீனாவின் கம்பியூசியஸ் தத்துவத்தை உருவாக்கியவர். உண்மையில் கம்பியூசியஸ் தத்துவம் சீனாவின் பழங்கால தத்துவ இயல் குழுக்களில் ஒன்றாகும். அது ஒரு தத்துவச் சிந்தனையாகும். மதச் சிந்தனை அல்ல. 

Saturday, 5 October 2013

ஓட்டை அப்பம் வீட்டை சுடும்.

ஜூ வி 09.10.2013

BSNL தவறை வெளிக்கொண்டு வந்தவர் தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேள​னத்தின் (பி.எஸ்.என்.எல்) பொதுச்செயலாளர் சி.கே.மதிவாணன். அவரிடம் பேசினோம்.

''பி.எஸ்.என்.எல். இணைப்புகளை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தை நீங்கள்தானே முதலில் வெளிக்கொண்டு வந்தீர்கள்?''

''தயாநிதி மாறன் செய்த தவறை நானோ, தொலைத் தொடர்புத் துறை தொழிற்சங்கங்களோ, ஊடகங்களோ முதலில் வெளிக்கொண்டு வரவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பச் சண்டையும் தயாநிதி மாறன் மற்றும் ஆ.ராசாவுக்கு இடையே ஏற்பட்ட ஈகோதான் இந்த விவகாரம் வெளியில் வந்ததற்கு மிக முக்கியக் காரணம்.  

2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். அப்போது மாறனின் சகோதரர்களுக்கும் அழகிரிக்கும் மோதல் ஏற்பட்டு, குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது.அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அழகிரியின் பக்கம் நின்றதோடு, தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை காலி செய்தார். அந்த இடத்தில் அமைச்சராக ஆ.ராசா உட்காரவைக்கப்பட்டார். அதன்பிறகு தயாநிதி, ஆ.ராசா மோதலாக இது மாறியது.

ஆ.ராசா காலத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் அதன்பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அதற்குப் பதிலடி கொடுக்க நினைத்த ஆ.ராசா, தயாநிதி மாறனின் வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை அம்பலப்படுத்தினார். 


எனவே, நடந்த தவறுகளைக் கண்டுபிடித்து ஒருவரை மாற்றி ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டது அவர்கள்தானே தவிர வேறு யாரும் அல்ல!''


Friday, 4 October 2013

இனி என் வீட்டுக்காரர் துணி துவைக்க வேண்டாம் 2025 ல்



எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலைகளில் ஒன்றாக உள்ளது. கிராமங்களில் பரவாயில்லை. ஆறு, குளத்தில் துவைத்து விடுவார்கள். நகரத்திலோ வாஷிங் மெஷினே கதி. இது போன்ற புலம்பல் ஆசாமிகளுக்காக தன்னாலேயே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது.
ரொம்பவும் சந்தோஷப்படாதீங்க..இந்த துணி வந்துள்ளது அமெரிக்காவில்.. அமெரிக்க ராணுவத்தில் "யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட், இன்ஜினியரிங் சென்டர்" என்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானி தாவுரங் என்பவர் புதிய வகை துணி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5 செட் யூனிபார்ம் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என்று பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் உடுப்புகளை பணியிடங்களில் துவைத்துக் கொள்ள வசதிகள் இருப்பதில்லை. இதனால் பல வீரர்கள் அழுக்குத் துணியோடு இருக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர்களுக்கு துவைக்க வேண்டிய அவசியம் இல்லாத துணியை கண்டறிந்தால் என்ன என்ற சிந்தனை தாவுரங்குக்கு ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் துவைக்காத துணி.
இவர் கண்டறிந்துள்ள இந்த புதிய வகை துணியில் "ஓம்னி போபிக் கோட்டிங்" என்ற வகை ரசாயன பூச்சு கலந்து நெய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சு பூசப்பட்ட துணியில் தயாரிக்கப்பட்ட ராணுவ சீருடையை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தினாலும் அழுக்கு ஆகாது. மேலும் கிரீஸ், சேறு போன்ற கறைகள் பட்டாலும், சீருடையை கழட்டி உதறினால் அதுவும் போய்விடும். அதே போல உடம்பில் எந்த மட்டமான துர்நாற்றம் இருந்தாலும் அதுவும் சீருடையில் காட்டாது. சீருடை நறுமணத்தோடு இருக்கும்.
புதிய வகை துணி குறித்து தாவுரங் கூறியதாவது:
போர்க் கள முனையில் இருக்கும் எங்கள் வீரர்களுக்கு முகாம் அலுவலகங்களில் துணி துவைப்பதற்காக இயந்திர வசதிகள் உள்ளன. ஆனால் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் துணி துவைப்பதற்காக வர இயலாது. ராணுவப்பணி என்பது மிகவும் கடுமையானது. அவர்கள் இங்கு வந்து செல்வதை தவிர்க்கும் வகையில் புதிய ரக துணி கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன கலவையால் உடல் நலத்துக்கு எவ்வித பிரச்னையும் வராது. புதிய ரக துணியில் தைக்கப்பட்ட சீருடைகள் கான்சாஸ் மாகாணம் போர்ட் ரெய்லி என்ற பணியிடத்தில் உள்ள வீரர்களுக்கு சோதனை முறையில் கொடுத்து அணிவித்தோம். எவ்வித பிரச்னையும் இல்லை. இந்த துணியானது தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்ளும் வகையில் அதாவது கழட்டி உதறினால், துவைத்தது போன்ற புத்துணர்வோடு சீருடை காணப்படும் என்றார்.