“பகுத்தறிவு தர்க்கம் சார்ந்தது. ஒழுக்கம் என்பது உறுதியான
நம்பிக்கைகளால் ஆனது. ஆகவே, பகுத்தறிவு
பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை ஏற்காததாகவே இருக்க முடியும்.”
‘ஒழுக்க நம்பிக்கை பகுத்தறிவுரீதியாக வந்தால், அது இன்னும் நிலையானதாக இருக்குமே. வெறும் நம்பிக்கையாக இருந்தால் எளிதில் கரையும் அல்லவா?’
நமக்கு அடிப்படையான கல்வியிலேயே பிரச்சினை
இருக்கிறது. ஓர் ஆசிரியர் மேடையில் நின்று உரையாற்ற, மாணவர்கள் அதைத் ‘தெரிந்துகொள்ளும்’ வகையான கல்வியே இங்கே பிரிட்டிஷாரால் அறிமுகம்
செய்யப்பட்டது. அந்தக் கல்விமுறை பிரிட்டனில் இருந்த ஜிம்னேசியங்கள் என்ற மதப்
பாடசாலைகளில் இருந்து நகல் செய்யப்பட்டவை.
புரிந்துகொள்வதற்கான கல்வி என்பது, விவாதங்கள் மூலமே
முன்னகர முடியும். இந்தியாவின் தொன்மையான குருகுல மரபுகளிலும் சரி, கிரேக்க மரபிலும்
சரி; அதுவே ஒரே
கல்விமுறைமையாக இருந்திருக்கிறது.
குறிப்பாக, எந்த ஒரு கருத்தையும் அதன் எதிர்த்தரப்பு வழியாக
இன்னும் தெளிவாக்கிக்கொள்ள முடியும். இந்திய ஞானமரபில் சுபக்கம் பரபக்கம் என்று
நேர்த் தரப்பும் எதிர்த் தரப்பும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவ்விரு தரப்புகள்
நடுவே உள்ள மோதல் வழியாகவே எந்த ஒரு கருத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை
இருந்திருக்கிறது. மிக நுட்பமான, சிக்கலான வேதாந்தக் கருத்துகள் அவ்வகையில்தான் இங்கே
உள்வாங்கிப் பயிலப்பட்டன.
ஆங்கில ஜிம்னேசியப் பாணி கல்விக்காக நாம் நம்முடைய
மரபான கல்விமுறையை மறந்தோம். ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த ஜிம்னேசியக்
கல்விமுறையை 50 ஆண்டுகள்
முன்னாலேயே உதறி, விவாதித்துக்
கற்கும் கல்விமுறைக்குச் சென்றன.
எனக்குத் தெரிந்து இதை வெல்ல ஒரே ஒரு வழி உள்ளது.
கல்விநிலையப் பாடத்திட்டத்துக்கு வெளியே நூல்களை வாசிக்கும் வழக்கத்தை
மேற்கொள்வது. எந்தத் துறையிலும் மிகச் சிறந்த நூல்கள், மிக எளிய நூல்கள்
இன்று எளிதில் கிடைக்கின்றன. வாசிக்கும் மனநிலை மட்டும் இருந்தால் போதும். அவற்றை
முறையாக விவாதித்துப் புரிந்துகொள்ள முயன்றால் போதும்.
தி இந்து 20/10/2013
நன்றி ஜெயமோகன், எழுத்தாளர் - தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com
No comments:
Post a Comment