Thursday, 12 October 2017

எதார்த்தமான உண்மைகள்: 😜😜👇👇

1. கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,  உருவம் கொடுத்தபின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..! 

(நம்ம ஊரு டிசைன் அப்படி)

2. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !!

(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)

3. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

(மிகச் சிரியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)

4. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது!!!

(ஆகவே ஆகாது...)

5. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்!!

(மரணம் ஒரு முடிவு அல்ல... !)

6. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை!!

(நிதர்சனமான உண்மை)

7. அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட  தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!  ஏன் இந்த கொடுமை..!!!

(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)

8. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!.

(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)

9. இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!

(எல்லாம் பீஸ் தான் காரணம்)

10. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)

11. 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

(லஞ்சம் தான் காரணம்)

11. மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

(யூஸ் பண்ணத் தெரியல..அவ்ளோதான்)

12. தூக்கம் வராமல் முதலாளி... தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!!!

(கரன்சி பண்ற வேலை)

13. கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில்லை..!!!

(இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை)

👍👍👍

Tuesday, 26 September 2017

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்💔🖤💔🖤💗💗💗 தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்🍃🌿🌱 போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத்👨‍👩‍👧‍👦👬🚶🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ 🍤🍗🍖🍳உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.🍀🍃🌿☘🌱

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 🍃🌿🍃🌿1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப்💔 பிரச்னைக்கு முருங்கைக்கீரை🌿 மட்டுமின்றி, முருங்கைப்பூவும்🌸 மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில்🍶🍶 இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்🍊🍊🍊 பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில்🍌🍌🍌 உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்🥕🥕🥕🥕 உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் 🥛🥛🥛🥛உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப்🌿🍃 போல அல்லாமல் காய்ந்த முருங்கை🍂🍂🍂 இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

✨🌟✨🌟✨🌟✨🌟✨

Sunday, 17 September 2017

சமஸ்கிருத மொழிக்கு முஸ்லிம்கள் செய்த சேவை,



'அயல்நாடுகளில் குறிப்பாக, அரபு நாடுகளில், சமஸ்கிருதத்தின் பெருமையைப் புரிந்து, அதற்கு முஸ்லிம்கள் செய்த சேவை, பாராட்டத்தக்கது.

ஆனால், இந்தத் தொடர்பு இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நின்றதோடு அற்று விட்டது...' என்றார் குப்பண்ணா.

'முஸ்லிமும், சமஸ்கிருதமுமா... அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் சம்பந்தப்படுத்துகிறீரே...' என்றேன்.

'இல்ல இல்ல... நான் சொல்றது உண்மை தான். அந்த சரித்திரம், ரொம்பப் பேருக்குத் தெரியாது. சமஸ்கிருத இலக்கியத்தில், 'இதோபதேசம்' (பஞ்ச தந்திர கதைகள்) என்னும் பெயர் பெற்ற நூலை, 'குலைலா திம்னா' என்ற பெயரில் அரபு மொழியில், அப்துல்லா மாக்பா என்பவர் மொழி பெயர்த்தார். இவர் பாக்தாத் காலிபின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர். இதே நூலை, கி.பி.1400ல், அபுல் மவுல்வி என்பவர் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
'கஜினி முகமதுவைப் பற்றி சமஸ்கிருதத்தில் காலிங்க அரசன் புகழ்ந்து எழுதிய, செய்யுள் நூலை, முதலில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். ஆனால், கஜினி முகமது, அடுத்த முறை போரிட வந்த போது, இந்த அரசனின் கோட்டையை முற்றுகையிட்டான். ஓடி ஒளிந்து கொண்டான் அரசன். ஆனால், அவன் எழுதிய காவியத்தை படித்து ரசித்தான், கஜினி முகமது. அதனால், அந்த அரசனுக்கே கோட்டையை விட்டுக் கொடுத்து சென்றான்.
'புகழ்பெற்ற சரித்திர ஆசிரியரும், ஜோதிடருமான அல்பர்னியா, சமஸ்கிருதம் பயில்வதற்காக, முல்தானில், 16 ஆண்டுகள் தங்கினார். அந்தக் காலத்தில் முல்தான், சமஸ்கிருத வித்யாகேந்திரமாக இருந்தது.
'அலாவுதீன் கில்ஜி காலத்தில், அஸ்ஸாமை சேர்ந்த முஸ்லிம் ஸுபிகளில் ஒருவர், கவுமாரர் எழுதிய, 'அமரகுண்டம்' என்ற, சமஸ்கிருத நூலை, பாரசீக பாஷையில் மொழி பெயர்த்தார். அதன் கையெழுத்து பிரதியான, 'பஹ்ருல் ஹயாத்' அமதாபாத்தில் உள்ள ஹஸ்ரத்பீர் முகமது ஷாவின் புத்தக சாலையில் இருக்கிறது.

'முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தில், 'கோகசேதி' என்னும் வடமொழி நூலை, 'டூட்டி நாமா' என்னும் பெயரில், மொழி பெயர்த்தனர்.
'அக்பரின் காலத்தில், 'சதாலங்கார சிம்ஹாசனபதிசீ' என்னும் பிரபல வடமொழி நூலின் மொழி பெயர்ப்பு வேலை நடந்தது. அக்பருடைய தர்பாரில் இருந்த, க்வாஜா ஸுசேன் என்பவர், இவற்றைக் காவிய வடிவில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால், வேலை முடிவதற்குள் அவர் இறந்து விட்டார். முல்லா அப்துல் காதர் பதினி, மீதிப் பகுதியை வசன ரூபத்தில் இயற்றி முடித்தார்.

'அதர்வண வேதத்தை, பாரசீகத்தில் மொழி பெயர்த்தார் ஷேக் பதன் என்பவர். இவர் பிறப்பால் பிராமணராக இருந்து, பிறகு இஸ்லாத்துக்கு மதம் மாறியவர். பிரசித்தி பெற்ற, 'லீலாவதி' என்ற கணித நூலை, பாரசீக மொழிக்கு மாற்றினார், அப்துல் பைஜீ.
'நசாப்கான், மவுலானா அப்துல் காதர் பதினி, ஷேக் சுல்தான், தானேசரி ஆகிய நான்கு புலவர்கள் மேற்பார்வையில், ராமாயணத்தை, பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்.

'இன்னும் சமஸ்கிருதம் கற்ற முகமதிய பண்டிதர்கள் பலர், இரு மொழிகளிலும் உழைத்து, சேவை செய்திருக்கின்றனர். உபநிஷத்தையும், பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்...' என்று கூறி முடித்தார் குப்பண்ணா.

28/08/2016 varamalar.

வீரபாண்டிய கட்டபொம்மன் கிஸ்தி கட்டவில்லை என்பது உலக மகா பொய்


.
இது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி யின் கற்பனை கதையே.

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது.

குப்பண்ணா ஒரு புத்தகத்தை ஓசைப் படாமல் என்னிடம் நீட்டி, 'அம்பி... இதப் படிச்சுப் பாருடா...' என்றார்.

அந்த ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் கண்ணிலும் படாமல், எக்மோர் மியூசியம் சென்று, வாகாக ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

ஜே.ராஜா முகம்மது எழுதிய, 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல் அது.

அதில், மே 31, 1798 வரை, கப்பத் தொகை, 16,550 ரூபாய் பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படி, கட்டபொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேய படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்து, பேசுமாறு பணித்தது.
இதன்படி, தன்னை, ஆக.,18, 1798ல் ராமநாதபுரத்தில் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.

அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்ட பொம்மனும், அவரது பரிவாரங்களும், ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி, 23 நாட்கள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.

கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, 5,000 (1080 பகோடா) ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன், 11,000 ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப் பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின், கட்டபொம்மன், சென்னை கவர்னருக்கு, மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்...

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து, அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்யவும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம் மற்றும் ஜான் காசாமேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில், (டிச.,15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம், ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது. விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில், லூசிங்டன் என்பவர், கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

03/04/2016 varamalar.

Tuesday, 15 August 2017

எல்லா நண்பர்களாலும் நையாண்டி செய்யப்படும் நாஞ்சில் சம்பத். அரசியலில் காசுமேல் ஆசைபடாமல் நல்லவராக இருக்கிறார். நான் தலை வணகுகிறேன்.


எல்லா நண்பர்களாலும் நையாண்டி செய்யப்படும் நாஞ்சில் சம்பத். அரசியலில் காசுமேல் ஆசைபடாமல் நல்லவராக இருக்கிறார். நான் தலை வணகுகிறேன்.

Wednesday, 2 August 2017

1773 ல் பிராமணர், சத்ரியர்,வைசியர்,சூத்திரர் எல்லோரும் சமம் என்ற சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1795ல் சதிர்யர்கள் மட்டுமே சொத்து வைத்துக்கொள்ளாம் என்ற சட்டம் நீக்கி சூத்திரர் வரை எல்லோரும் சொத்து வாங்கலாம் என்ற சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1804 ல் பெண் சிசு கொலை தடுப்பு சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1811 ல் கொத்தடிமைகள் தடுப்பு சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1817 ல் பிராமினர்களும் செயும் தவறுகளுக்கு தண்டனைக்கு உண்டு என்று சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1819 சூத்திர திருமண பெண் திருமணத்துக்குப் பின் முதல் 7 நாட்கள் கோவிலில் பணிவிடை செய்ய வேண்டும் என்பதை நீக்கி சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்

1835 ல் பிராமினர் மட்டுமின்றி எல்லோரும் கல்வி கற்கலாம் சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1837 ல்' சூத்திரனின் தலை பிள்ளையை கொலைசெய்வதை தடுத்து சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

1835ல் சூத்திரர்கள் நாற்காலியில் உட்கரலாம் சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த சட்டம்.

1868 ல் இந்து மனு சட்டத்தை தடை செய்து சட்டம் கொண்டுவந்தனர் ஆகிலேயர்கள்.

Friday, 10 February 2017

make police as people servant

ஆங்கிலேயர், ஞாயமென்று சொல்லி

அராஜகம் செய்ய கண்டுபித்தது

போலீஸ்.

நாம் அதை ஆளும்ம கட்சி

கையிலிருந்து பறித்து

மக்கள் சேவகனாக

மாற்றவேண்டும்

யாருக்குத்தான் கவலையில்லை ஜெயலலிதாவுக்கும் தான்






என்னருமை தோழி...!



மிகவும் சோகத்துடன் நீங்கள் இந்த வார்த்தைகளை கூறிய நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி. இதனைக் கேட்ட போது, நான் கலங்கிப் போனேன். 


‘‘என் தந்தை இருந்திருந்தால் சினிமாவில் நுழைந் திருக்கமாட்டேன். 


என் தாய் இருந்திருந்தால் அரசியலில் நுழைந்திருக்கமாட்டேன்...’’ 


என்று அடிக்கடி கூறி வந்த நீங்கள், அன்று ஒரு படி மேலேபோய்


‘‘இறைவன் இருந்திருந்தால் இந்த துன்பமிக்க உலகில் நான் பிறந்திருக்க மாட்டேன்...’’

என்று விரக்தியுடன் கூறுமளவுக்கு 1971-ம் வருடத்தின் நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் அரங்கேறின.


நரசிம்மன்.
தமிழ் ஹிந்து 10/02/2017

Monday, 30 January 2017

அவை அறிதல் திருக்குறள் Meiappan's translation

Here audience is nothing but friends and Office College

711 Select the sentence as per the audience.
712 Shorten speech as per audience time and Unresents.
713 Unknowing the nature of audience will lead to no effective words & work.
714 Behave as per audience knowledge i.e.  Be roman at Rome.
715 Non-urgent intention in meeting will help all the ways.
716 Speaking wrong in intellectuals shows one bad manners.
717 Using proper words show ones knowledge.
718 Speaking with like-minded people is like helping self-grown plant.
719 Don't use intelligent & self-effective words with ignorant people.
720 Talking with half-baked people is waste of good time.

அவை அறிதல்

711 ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

711 Select the sentence as per the audience.

712 சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

712 Shorten speech as per audience time and Unresents.

713 அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

713 Unknowing the nature of audience will lead to no effective words & work.

714 அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்
714 Behave as per audience knowledge i.e.  Be roman at Rome.
715 அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

715 Non-urgent intention in meeting will help all the ways.

716 அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

716 Speaking wrong in intellectuals shows one bad manners.

717 மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.
717 Using proper words show ones knowledge

718 உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.
718 Speaking with like-minded people is like helping self-grown plant

719 நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.
719 Don't use intelligent & self-effective words with ignorant people

720 அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

720 Talking with half-baked people is waste of good time.


Sunday, 1 January 2017

பார்வதி, பரமசிவன், அடுத்து பிரம்மா, விஷ்ணு , சிவன். ஒத்து போகிரதா ?

To recap briefly, about 1.3 billion years back, two black holes, of masses 36 and 29 times that of the sun, merged to form a unit. This cataclysmic event shook the fabric of space-time and emanated a characteristic disturbance, which our scientists have detected using the advanced LIGO (Laser Interferometer Gravitational Wave Observatory) detectors. The black holes first came close to each other, then locked in circular orbits and then abruptly merged. The corresponding signal would also have three parts, the inspiral, merger and ringdown. The beauty is that this waveform was recorded and the last part is akin to a bell, ringing and fading away.

பார்வதி, பரமசிவன்,  அடுத்து பிரம்மா, விஷ்ணு ,  சிவன். ஒத்து போகிரதா ?