Tuesday, 26 November 2013

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

PAUSE   4  RELAX

தொடர்ந்து கணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு மானிடரிலிருந்து வரும் ஒரு வித கதிர்கள் கண்களை பாதிக்கிறது. அதற்காக கணினியை உபயோகப்படுத்தாமல் இருப்பது ஒரு கடினமான காரியம். காரணம் நாம் இருக்கும் காலம் அத்தகையது. ஆனால் கண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது எப்படி? மருத்துவ ரீதியாக பார்த்தால், மருத்துவர்கள் கண்களுக்கு 30 நிமடத்திற்கு ஒருமுறையாயினும் 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நலமாயிருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் இதை நம்மவர்கள் செய்ய மறந்துவிடுகின்றனர். ஆகவே இதனை நினைவுகூட்ட நம் கணினியிலேயே ஒரு மென்பொருளை ஏற்றிவிட்டால் என்ன? இப்படி தோன்றினது தான் Pause 4 Relax என்கிற மென்பொருள். 

Pause 4 Relax மென்பொருள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 5 நிமிடத்திற்கு கணினி திரையை டிம் (dim) செய்துவிடும். இருப்பினும் நாம் இந்த நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். மேலும் படம் பார்க்கும்பொழுது இந்த மென்பொருளை தூங்க வைத்தும் விடலாம் (disable). இதன் மூலமாக நம் கண்களை பாதுகாக்க முடியும். 

மேலும் இந்த மென்பொருள் சிறிய அளவை(66KB!) கொண்டதுடன் இதனை install பன்னவும் தேவையில்லை (Portable application). இதனால் இந்த மென்பொருளை PEN DRIVEல் இருந்தும் இயக்கலாம், பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனியில் எந்த ஒரு மென்பொருளையும் install செய்ய முடியாது. அந்த பிரச்சனையையும் இது தீர்க்கிறது.
இது நலமானதாக தோன்றுகிறது.

Monday, 25 November 2013

also ran

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.


3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

4.
சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5.
சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

6.
ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7.
மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

8.
தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

9.
ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.


10.
மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

Tuesday, 12 November 2013

ஜெயித்தவர்களிடம்

ஜெயித்தவர்களிடம்
அப்படி என்னதான்இருக்கிறது?
Ø சாதிக்க வேண்டும் என்ற சபதம்
இருக்கிறது
Ø வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற
வைராக்கியம் இருக்கிறது
Ø வென்று காட்ட வேண்டும் என்ற
வீம்பு இருக்கிறது
Ø அடைவதற்கு என்று ஒரு லட்சியம்
இருக்கிறது
Ø அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம்
இருக்கிறது
Ø வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற
தாகம் இருக்கிறது
Ø வாய்ப்பு வரவில்லை என்றால்
அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
Ø உணவு, உறக்கம் இவற்றைக்கூட
ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
Ø தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும்
சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
Ø அடிமேல் அடிபட்டாலும் அடுத்த
அடியை எடுத்து வைக்கும் துணிச்சல்
இருக்கிறது
Ø தங்கள் தகுதிக்கும், திறமைக்கும்
சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல்
இருக்கிறது
Ø தொடர்ந்து, எந்த
வகையிலாவது ஏதாவது பலங்களைக்
கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது
Ø சூழ்நிலைக்குத்
தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம்
இருக்கிறது
Ø விமர்சனத்தைச் சரியான விதத்தில்
எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது
Ø அறிவு, ஆற்றல், ஆதரவுகள்
அனைத்தையும் முழுமையாகப்
பயன்படுத்திக்கொள்ளும்
மூளை இருக்கிறது
Ø குறிக்கோள் நோக்கிய
வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய்
ஒதுக்கும் அக்கறை இருக்கிறது
Ø கடமைகள் காத்துக் கிடக்க,
பொழுதுபோக்குகளில்
புத்தியை செலுத்தாத
பொறுப்பு இருக்கிறது
Ø நேற்றைவிட
இன்று எவ்வளவு வளர்ந்தோம்
என்று அளந்து அறியும் ஆர்வம்
இருக்கிறது
Ø அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க
முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது
Ø இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன
இருக்கிறது?

Sunday, 10 November 2013

நீர் ஆகாரம் = ஆரோக்கியம்

ஆற்று நீர் வாதம் போக்கும்
 அருவி நீர் பித்தம் போக்கும்
 சோத்து நீர் இரண்டையும் போக்கும்.....


நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல், எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய. பழஞ்சோறும் தொட்டுக் கொள்ள வெண்காயமும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".


இனி மதிரையுடன் காப்பி வேண்டாம்

ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா ?

ஆல்கஹால்-

மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. 


பால் பொருட்கள்-

பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.

நார்ச்சத்து உணவுகள்-

எப்போது ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போதும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

அமிலத் தன்மை உள்ள உணவுகள்-

அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி  உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்துவிடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

ஹெவி ஃபுட்-

மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு நன்கு சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது.

Tuesday, 5 November 2013

உங்களுக்கு இது தேவைப்படாது

எடையைக் குறைக்க சுலபமான வழி ஜெனரல் மோட்டார்ஸ் டயட் .

மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.


அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.

1.
ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

2.
இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

3.
மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4.
நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

5.
ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

6.
ஏழாவது நாள் ஒரு கப் சாதம் காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

7. 8-
ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.

முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-
வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.

நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-
ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.