ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா ?
ஆல்கஹால்-
மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன.
பால் பொருட்கள்-
பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.
நார்ச்சத்து உணவுகள்-
எப்போது ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போதும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
அமிலத் தன்மை உள்ள உணவுகள்-
அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்துவிடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
ஹெவி ஃபுட்-
மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு நன்கு சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது.
No comments:
Post a Comment