Friday, 23 January 2015

அன்பே இல்லம்


ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.

அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .

அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.

அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..
அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.
ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.

அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..
அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.

இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.

இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.
அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.

இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

Thursday, 15 January 2015

தேவர்களின் பகல் தைமாதம்

நமக்கு ஒரு நாள் என்பது ,பகல் 12 மணிநேரம் , இரவு 12 மணி நேரம் சேர்ந்த 24 மணி நேரம் 1 நாள் . நம் பித்ருக்களுக்கு ( மறைந்த நம் முன்னோர்களுக்கு) ஒரு நாள் என்பது , ஒரு மாதத்தில் வரும் சுக்ல பட்சம் 15நாள்= பகல் பொழுதாகவும் , கிருஷ்ணபட்சம் 15நாள்= இரவு பொழுதாகவும் ஆக 2 பட்சங்களும் சேர்ந்த 1 மாதம் நம் மறைந்த முன்னோர்களுக்கு ஒரு நாள் . இப்ப கவனியுங்கள் நாம் மாதத்தில் வரும் அமாவாசை தோறும் நம் முன்னோர்களுக்கு தர்பணம் பன்னுவது அவர்களுக்கு நாம் தினசரி உணவு அளிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும் . நாம் வணங்கும் தேவர்களுக்கு ஒரு நாள் என்பது , ஒரு வருடத்தில் வரும் உத்ராயண காலம் 6 மாதம்= பகல் பொழுதாகவும் , தெட்சாயண காலம் 6 மாதம்= இரவுப்பொழுதாகவும் , ஆக 2 அயணங்கள் இணைந்த 1 வருடம் நாம் வணங்கும் தேவர்களுக்கு 1 நாள், சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் காலமே மாதக்கணக்காக எடுத்துக்கொள்ளப்படும் . அந்த வகையில் இன்று மகர ராசியில் சஞ்சாரம் செய்கிறார் , இந்நாளே மகர சங்கராந்தி எனும் தை திருநாள் ஆகும். அதாவது இரவு முடிந்து பகல் ஆரம்பிக்கின்ற நாள் இந்நாள் , அனைவருக்கும் தை பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பர்களே...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இந்தியர்கள் அறிஞர்களே

சித்திரை மட்டுமே தமிழ் புத்தாண்டு:
அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும். நாமும் பல்லாயிரம் வருடமாக அதை சித்திரையே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதற்கு பல ஆதாரங்களை நான் தருகிறேன் .அதற்கான காரணங்கள் பல உள்ளன.
சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.
சைத்ரா/சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இலக்கிய ஆதாரங்கள்:
புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று கூறுகிறார் ஞானப்பிரகாசர்.
அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று கூறுகிறது .
நக்கீரர் "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று கூறுகிறார். இதில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் ராசமாணிக்கனார் கூறுகிறார்.
சித்திரை அல்லது மேஷம் என்பது தான் தமிழில் முதல் மாதம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் சைத்ரா/சித்திரை முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தமிழர் சித்திரைக்கும் மற்ற மாநில சைத்ராவிற்கும் 10 அல்லது 15 நாள் வேறுபாடு தான். அதற்கு காரணம் "சர்வதேச ஆண்டு முறையை இந்தியர்கள் ஏற்ற போது பல மாநிலங்கள் ஒரே தினத்தில் ஏற்கவில்லை. ஒரு மாநிலம் ஏற்று அண்டை மாநிலம் ஏற்க பல வருடங்கள் ஆயிற்று". சர்வதேச முறைக்காக பாரம்பரிய காலண்டரில் சில நாள் மாற்றப்பட்டது.
அந்த இடைவெளியால் தமிழ் புத்தாண்டுக்கு சில நாள் முன்பு பல மாநிலமும், தமிழனுடன் அதே நாளில் "கேரளா,ஒரிசா, நேபாள்,மொரிசியஸ், பாலி இந்து மக்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்".
புத்தாண்டுக்கு ஒரு நாள் அல்லது சில நாள் கழித்து அல்லது அதே நாளில் குஜராத், அஸ்ஸாமில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.
அதன் விவரம் இதோ சித்திரை/சைத்ரா முதல் நாள் தமிழ் புத்தாண்டு, கேரளா விஷு, ஒரிசா விஷ்வா சங்கராந்தி, பஞ்சாப் வைசாகி, நேபாள் மைதிலி, இந்தோனேசியா பாலி இந்துக்கள் நியோபி,இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.
தமிழ் புத்தாண்டுக்கு சில நாளுக்கு முன்பு தெலுகு உகாதி, கன்னட பேவு பெல்லா, ராஜஸ்தான் தாப்னா, சிந்தி சேட்டி சந்த், மணிப்புரி சஜிபு செய்ரோபா, மராட்டி குதிபத்வா, கொங்கணி நவ்வே வர்சாச்சே, ஹிமாச்சல் பிஷு இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.
இரண்டு , மூன்று நாளுக்கு முன்பு அனைத்து ஹிந்தி மாநிலங்களும் 'சைத்ர பிரதிபடா' என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
குஜராத், தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் முன்பு கொண்டாடுகின்றனர். அசாமி 'ரொங்காலி பிஹு' என்று ஒரு நாள் முன்பு தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் பின்பு புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
இந்த இந்திய புத்தாண்டுகள் அனைத்துமே March 28 லிருந்து April17 க்குள் முடிந்து விடும். தமிழ் என்பது சமய நம்பிக்கை சார்ந்தது வெளிப்படையாக சொன்னால் புத்தாண்டும், பொங்கல் எல்லாம் ஒரு சமயத்தினர் மட்டும் கொண்டாடுகின்றனர். இசுலாமியர் ஹிஜிராவையும் கிறித்தவர் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அவர்களின் நம்பிக்கை வேறு அது போல நாத்திகர்கள் புத்தாண்டில் மூக்கை நுழைக்க வேண்டாம். தமிழ் புத்தாண்டை மாற்ற அரசியல்வாதிக்கு உரிமையில்லை...
பொங்கல், மாட்டு பொங்கல், கன்னி பொங்கல் என நம் பாரம்பரியத்துடன் கொண்டாடுவோம். !!


Tuesday, 13 January 2015

இட்லி மட்டுமில்லை இதுவும் தான்

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில,....!!

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895
ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/)

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.
இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…

இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.
இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார்.

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.
இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?
(
பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

Tuesday, 6 January 2015

சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது

சமையலில் செய்யக்கூடாதவை...!!
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

Thursday, 1 January 2015

என்ன இல்லை தமிழில்

எண் ஒலிப்பு[தொகு]
  • ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண்
அளவு
சொல்
1/320
320 ல் ஒரு பங்கு
முந்திரி
1/160
160 ல் ஒரு பங்கு
அரைக்காணி
3/320
320 ல் மூன்று பங்கு
அரைக்காணி முந்திரி
1/80
80 ல் ஒரு பங்கு
காணி
1/64
64 ல் ஒரு பங்கு
கால் வீசம்
1/40
40 ல் ஒரு பங்கு
அரைமா
1/32
32 ல் ஒரு பங்கு
அரை வீசம்
3/80
80 ல் மூன்று பங்கு
முக்காணி
3/64
64 ல் மூன்று பங்கு
முக்கால் வீசம்
1/20
20 ஒரு பங்கு
ஒருமா
1/16
16 ல் ஒரு பங்கு
மாகாணி (வீசம்)
1/10
10 ல் ஒரு பங்கு
இருமா
1/8
8 ல் ஒரு பங்கு
அரைக்கால்
3/20
20 ல் மூன்று பங்கு
மூன்றுமா
3/16
16 ல் மூன்று பங்கு
மூன்று வீசம்
1/5
ஐந்தில் ஒரு பங்கு
நாலுமா
1/4
நான்கில் ஒரு பங்கு
கால்
1/2
இரண்டில் ஒரு பங்கு
அரை
3/4
நான்கில் மூன்று பங்கு
முக்கால்
1
ஒன்று
ஒன்று
  • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண்
ஒலிப்புச் சொல்
1
ஒன்று (ஏகம்)
10
பத்து
100
நூறு
1000
ஆயிரம்(சகசிரம்)
10,000
பத்தாயிரம்(ஆயுதம்)
1,00,000
நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000
பத்து நூறாயிரம்
1,00,00,000
கோடி
10,00,00,000
அற்புதம்
1,00,00,00,000
நிகற்புதம்
10,00,00,00,000
கும்பம்
1,00,00,00,00,000
கணம்
10,00,00,00,00,000
கற்பம்
1,00,00,00,00,00,000
நிகற்பம்
10,00,00,00,00,00,000
பதுமம்
1,00,00,00,00,00,00,000
சங்கம்
10,00,00,00,00,00,00,000
வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000
அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000
(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000
பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000
பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000
பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)
மேலும் சில எண் குறிகள்[தொகு]
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
மேலும் சில இறங்குமுக எண்கள்[தொகு]
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
அளவைகள்[தொகு]
நீட்டலளவு[தொகு]
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்[தொகு]
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்[தொகு]
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு[தொகு]
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு[தொகு]
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
48 96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.