Tuesday, 15 July 2014

மனம் உருகிறது

மனம் உருகிறது

ஒருமுறை காமராஜர் குற்றாலத்திற்கு குளிக்க வந்திருந்தார்...
ஏற்கனவே குளித்துக்கொண்டிருந்தவர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.. 
வெளிய ஒதுங்கி நின்ற மக்கள் முனுமுனுப்புடன் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு படிக்கட்டில் நடந்து வரும் காமரஜரையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருவிக்கருகில் வந்த காமராஜர் ஒதுங்கியிருந்த மக்களை பார்த்ததும்..
அங்கிருந்த காவலரை பார்த்து
"இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியான்னே!
இவங்களோட நா சேந்து குளிச்சா ஒனக்கென்னயா???
ஒதுங்கி நின்ற மக்களை பார்த்த காமராஜர்
"இப்படி ஓதுங்கி நின்னா எப்படின்னேன்?, வாங்க எல்லாரும் சேந்து குளிப்போம்"., எனக் கூறிவிட்டு சென்றதும்...
ஏழை பங்காளனை நேரில் பார்த்த களிப்பில், மக்கள் ஆனந்த ஆர்ப்பரிப்புடன் குளியல் போட தொடங்கினர்...
அன்று குற்றாலமே குதூகளித்ததை யாராலும் மறந்திருக்க முடியாது நண்பர்களே!!!



தற்போது தேர்தலில் ஒட்டு போடும் நமக்கு அந்த அருகதை இல்லை

காமராசர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.
தன்னுடைய உதவியாளர் வைரவனிடம், ""இந்த வீட்ல நாம ரெண்டு பேருதான். அரிசி பருப்பெல்லாம் பக்கத்தில இருக்கிற ரேஷன் கடையில வாங்கிக்கோ. ஜனங்க என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் நம்ம சாப்பாடு!'' என்றார்.
""
ரேஷன்ல வாங்குற அரிசி ஒரு மாதிரி வாடை வீசுதுய்யா... வேற மாத்திடலாமா? நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார் வைரவன்.
இதைக் கேட்ட காமராசருக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
""
முதலமைச்சர்தாம்லே இந்த அரிசியைச் சாப்பிடணும்! இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ, அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார்.



MBBS
காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம்,
"உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன'' என்று அதிகாரிகள் கூறினர்.
உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று 20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.
எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரிடமே அதைக் கேட்டார்கள்.
அதற்கு காமராசர்,
"நான் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.
அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்

ஏழை பங்காளன்

அப்போது காமராஜர் முதல்வராக இருந்த சமயம்...
ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார்.
அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டார்.
அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார்.
திருமண நாள் வந்தது. காமராஜரின் கார் அந்தத் தியாகியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்த காமராஜரைப் பார்த்ததும் தியாகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
காமராஜர் அவரிடம், ""நீ அழைப்பிதழ் கொடுத்தபோது உன் வீட்டுத் திருமணத்துக்கு வர முடிவு செய்துவிட்டேன். ஆனால் இதை நான் அப்பவே சொல்லியிருந்தால், முதலமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட கடன் வாங்கித் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியிருப்பாய். உன்னை கடன்காரனாக ஆக்க நான் விரும்பவில்லை'' என்று கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

 No kalyanam
"பொழுது விடிந்தால் போராட்டம்" என்று தனது இளமை காலத்தை பொறுப்பின்றி கழிக்கிறான் காமராசு, என்று உறவினர்கள் குமுறினார்கள். "போலீசில் சிக்கினால் சிறையில் தள்ளி தன் மகனை சீரழித்து விடுவார்கள்" என சிவகாமி அம்மையார் சித்தம் கலங்கினார் .
இதற்கேல்ல்லாம் ஒரே வழி காமராசுக்கு கால்கட்டு போட்டுவிடவேண்டியதுதான் என்று அன்னைக்கு ஆலோசனை கூறினார்கள் உறவினர்கள்.
காமராஜர் வெளியூரில் ஒரு போராடத்திற்கு சென்றிருந்த சமயம் திருமண ஏற்பாட்டை துரிதகதியில் தொடங்கினர்.காமராஜருக்கு ஏற்ற பெண்ணை தேடி முடிவு செய்தாகிவிட்டது. தேதிகூட குறித்தாகிவிட்டது. மாப்பிளை வந்தால் மாலை மாற்றிக்கொள வேண்டியதுதான் .
வெளியூரில் இருந்து திரும்பியவுடன் காமராஜர் வீட்டில் நடக்கும் வேடிக்கையை கண்டார். ஒரு நொடியில் தன் மனதை கல்லாக்கிக்கொண்டார். தனது சுதந்திர போராட்ட உணர்வுகளுக்கு திருமணம் ஒரு தடையே என முழுவதுமாக நம்பினார் . எனவே காமராஜர் "எனக்கு திருமணம் தேவை இல்லை, திருமணதிற்கு வற்புறுத்தினால் என்னை மறந்துவிடுங்கள்" என்று தீர்மானமாக தெரிவித்தார்.
கண்ணெதிரில் மகன் நடமாடினால் போதும் என்று தேற்றிக்கொண்ட அன்னை, கண்ணீர் கசிந்த கண்களுடன் மருமகளுக்காக ஏங்கும் ஆசையை மனதிலிருந்து அகற்றினார்.
ஆம் தன் மகனை தேசத்திற்காக அற்பணித்தார் அந்த தியாகத்தாய்.........


டாக்டர் பட்டம் வேண்டாம் 
''''''''''''’''’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரை தேடி வந்தனர் ..

அவர்களிடம் பெருந்தலைவர் டாக்டர் பட்டமா..? எனக்கா?நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம். நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களை கண்டு பிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். போய் வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்..,.

மக்களோடு மக்களாய் வாழ்ந்த காமராஜர்
காமராஜர் ஒரு சமயம் வெளியூர் சுற்றுப்பயணம்
முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில்
நீண்ட நேரமாகத் தமது கார் நிற்பதும், ஏராளமான

தற்காலத்தில் நடந்து இருந்தால் POLICE COMMISSIONER  வேலை போயிருக்கும்


வாகனங்களின் ஹாரன்கள் ஒலிப்பதும் அவரது
கவனத்துக்கு வந்தது.காரிலிருந்து வெளியே வந்து சுற்றிலும் பார்த்தார்.சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில்
ஏராளமான கார்களும் வண்டிகளும் நின்று
டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது.
சற்றே நடந்து பார்த்தார் காமராஜர். பாலத்தின்
நடுவே ஒரு லாரி பிரேக் டவுன் ஆகி நின்றிருப்பதும்
ஒரே ஒரு டிராஃபிக் போலீஸ்காரர் போக்குவரத்தைச்
சரிபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
உடனே காமராஜர் அவரருகே சென்று அவருக்கு
உதவி செய்து போக்குவரத்தைச் சரிப்படுத்திவிட்டுத்
தனது காருக்குத் திரும்பி வந்து தனது பயணத்தைத்தொடர்ந்தார். அதுமட்டுமல்லாமல் சைதாப்பேட்டை காவல்
நிலையத்துக்குச் சென்று இதுபோன்ற இடங்களில்
இன்னொருவரைக் கூடுதலாக நியமித்துப் போக்கு
வரத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று கட்டைளை
இட்டு விட்டுத் தமது அலுவலகம் திரும்பினார்.

Thursday, 10 July 2014

இன்று வேறுவேலை இல்லை

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?
"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்"
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

மிக பழைய‌ தமிழ் பெயர்கள்

சில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.
தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது
எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது
குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது
உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?
ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது
ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்
விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே
வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்
பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.
வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.
மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்
ஏர்க்காடு
சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.
திருகோணமலை
இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....
என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்.

Monday, 7 July 2014

வழக்கம்போல் பொறுமை இல்லாதவர்கள் கலர் பார்க்கவும்

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது

Sunday, 6 July 2014

நம்பியார் ஹீரோ.


தாரணி எங்கும் தமிழ்