Tuesday, 26 September 2017

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்💔🖤💔🖤💗💗💗 தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்🍃🌿🌱 போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத்👨‍👩‍👧‍👦👬🚶🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ 🍤🍗🍖🍳உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.🍀🍃🌿☘🌱

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 🍃🌿🍃🌿1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப்💔 பிரச்னைக்கு முருங்கைக்கீரை🌿 மட்டுமின்றி, முருங்கைப்பூவும்🌸 மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில்🍶🍶 இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்🍊🍊🍊 பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில்🍌🍌🍌 உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்🥕🥕🥕🥕 உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் 🥛🥛🥛🥛உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப்🌿🍃 போல அல்லாமல் காய்ந்த முருங்கை🍂🍂🍂 இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

✨🌟✨🌟✨🌟✨🌟✨

Sunday, 17 September 2017

சமஸ்கிருத மொழிக்கு முஸ்லிம்கள் செய்த சேவை,



'அயல்நாடுகளில் குறிப்பாக, அரபு நாடுகளில், சமஸ்கிருதத்தின் பெருமையைப் புரிந்து, அதற்கு முஸ்லிம்கள் செய்த சேவை, பாராட்டத்தக்கது.

ஆனால், இந்தத் தொடர்பு இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நின்றதோடு அற்று விட்டது...' என்றார் குப்பண்ணா.

'முஸ்லிமும், சமஸ்கிருதமுமா... அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் சம்பந்தப்படுத்துகிறீரே...' என்றேன்.

'இல்ல இல்ல... நான் சொல்றது உண்மை தான். அந்த சரித்திரம், ரொம்பப் பேருக்குத் தெரியாது. சமஸ்கிருத இலக்கியத்தில், 'இதோபதேசம்' (பஞ்ச தந்திர கதைகள்) என்னும் பெயர் பெற்ற நூலை, 'குலைலா திம்னா' என்ற பெயரில் அரபு மொழியில், அப்துல்லா மாக்பா என்பவர் மொழி பெயர்த்தார். இவர் பாக்தாத் காலிபின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர். இதே நூலை, கி.பி.1400ல், அபுல் மவுல்வி என்பவர் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
'கஜினி முகமதுவைப் பற்றி சமஸ்கிருதத்தில் காலிங்க அரசன் புகழ்ந்து எழுதிய, செய்யுள் நூலை, முதலில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தனர். ஆனால், கஜினி முகமது, அடுத்த முறை போரிட வந்த போது, இந்த அரசனின் கோட்டையை முற்றுகையிட்டான். ஓடி ஒளிந்து கொண்டான் அரசன். ஆனால், அவன் எழுதிய காவியத்தை படித்து ரசித்தான், கஜினி முகமது. அதனால், அந்த அரசனுக்கே கோட்டையை விட்டுக் கொடுத்து சென்றான்.
'புகழ்பெற்ற சரித்திர ஆசிரியரும், ஜோதிடருமான அல்பர்னியா, சமஸ்கிருதம் பயில்வதற்காக, முல்தானில், 16 ஆண்டுகள் தங்கினார். அந்தக் காலத்தில் முல்தான், சமஸ்கிருத வித்யாகேந்திரமாக இருந்தது.
'அலாவுதீன் கில்ஜி காலத்தில், அஸ்ஸாமை சேர்ந்த முஸ்லிம் ஸுபிகளில் ஒருவர், கவுமாரர் எழுதிய, 'அமரகுண்டம்' என்ற, சமஸ்கிருத நூலை, பாரசீக பாஷையில் மொழி பெயர்த்தார். அதன் கையெழுத்து பிரதியான, 'பஹ்ருல் ஹயாத்' அமதாபாத்தில் உள்ள ஹஸ்ரத்பீர் முகமது ஷாவின் புத்தக சாலையில் இருக்கிறது.

'முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தில், 'கோகசேதி' என்னும் வடமொழி நூலை, 'டூட்டி நாமா' என்னும் பெயரில், மொழி பெயர்த்தனர்.
'அக்பரின் காலத்தில், 'சதாலங்கார சிம்ஹாசனபதிசீ' என்னும் பிரபல வடமொழி நூலின் மொழி பெயர்ப்பு வேலை நடந்தது. அக்பருடைய தர்பாரில் இருந்த, க்வாஜா ஸுசேன் என்பவர், இவற்றைக் காவிய வடிவில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால், வேலை முடிவதற்குள் அவர் இறந்து விட்டார். முல்லா அப்துல் காதர் பதினி, மீதிப் பகுதியை வசன ரூபத்தில் இயற்றி முடித்தார்.

'அதர்வண வேதத்தை, பாரசீகத்தில் மொழி பெயர்த்தார் ஷேக் பதன் என்பவர். இவர் பிறப்பால் பிராமணராக இருந்து, பிறகு இஸ்லாத்துக்கு மதம் மாறியவர். பிரசித்தி பெற்ற, 'லீலாவதி' என்ற கணித நூலை, பாரசீக மொழிக்கு மாற்றினார், அப்துல் பைஜீ.
'நசாப்கான், மவுலானா அப்துல் காதர் பதினி, ஷேக் சுல்தான், தானேசரி ஆகிய நான்கு புலவர்கள் மேற்பார்வையில், ராமாயணத்தை, பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்.

'இன்னும் சமஸ்கிருதம் கற்ற முகமதிய பண்டிதர்கள் பலர், இரு மொழிகளிலும் உழைத்து, சேவை செய்திருக்கின்றனர். உபநிஷத்தையும், பாரசீகத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்...' என்று கூறி முடித்தார் குப்பண்ணா.

28/08/2016 varamalar.

வீரபாண்டிய கட்டபொம்மன் கிஸ்தி கட்டவில்லை என்பது உலக மகா பொய்


.
இது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி யின் கற்பனை கதையே.

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது.

குப்பண்ணா ஒரு புத்தகத்தை ஓசைப் படாமல் என்னிடம் நீட்டி, 'அம்பி... இதப் படிச்சுப் பாருடா...' என்றார்.

அந்த ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் கண்ணிலும் படாமல், எக்மோர் மியூசியம் சென்று, வாகாக ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

ஜே.ராஜா முகம்மது எழுதிய, 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல் அது.

அதில், மே 31, 1798 வரை, கப்பத் தொகை, 16,550 ரூபாய் பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படி, கட்டபொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேய படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்து, பேசுமாறு பணித்தது.
இதன்படி, தன்னை, ஆக.,18, 1798ல் ராமநாதபுரத்தில் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.

அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்ட பொம்மனும், அவரது பரிவாரங்களும், ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி, 23 நாட்கள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.

கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, 5,000 (1080 பகோடா) ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன், 11,000 ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப் பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின், கட்டபொம்மன், சென்னை கவர்னருக்கு, மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்...

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து, அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்யவும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம் மற்றும் ஜான் காசாமேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில், (டிச.,15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம், ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது. விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில், லூசிங்டன் என்பவர், கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

03/04/2016 varamalar.