Friday, 24 January 2014

படிக்க பொறுமை இல்லாதவர்கள் கலர் மட்டும் பார்க்க - 2


நந்தகுமார் படபடக்கும் இதயத்தோடு காத்திருக்கிறான்.
நேர்முகத் தேர்வில் அடுத்து உள்ளே செல்ல வேண்டியது அவனது முறை என்கிறார் ஊழியர். ‘‘இன்னும் ஒருத்தருக்கு அடுத்ததாக நான் வருகிறேனே’’ என்று வேண்டுகோள் வைக்கிறான் நந்தகுமார். தயக்கத்துக்குப் பின் அது ஏற்று கொள்ளப்படுகிறது.
இருபது நிமிடம் கழித்து அவன் பெயர் மீண்டும் அழைக்கப்பட, நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைகிறான். நான்கு தேர்வாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் நந்தகுமார் ‘‘குட் மார்னிங் சார்’’ என்று சொல்கிறான். நான்காவது முறையாக அதைச் சொல்லும்போது நான்கு பேருமே சிரித்துவிடுகிறார்கள். சங்கடத்துடன் நந்தகுமார் உட்கார்ந்து கொள்கிறான்.
‘‘உங்கள் சிறப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார் தேர்வாளர்களில் ஒருவர்.
‘‘தன்னம்பிக்கை’’ என்று சொல்கிறான் நந்தகுமார்.
‘‘அதை சத்தமாகச் சொல்லாமல், ஏன் இவ்வளவு மெதுவாகச் சொல்கிறீர்கள்?’’ என்கிறார் இரண்டாவது தேர்வாளர்.
உடனே சத்தமாக ‘‘தன்னம்பிக்கை’’ என்கிறான் நந்தகுமார்.
புன்னகைத்தபடியே மூன்றாவது தேர்வாளர் நந்தகுமாரைப் பார்த்து ‘‘உங்களுடைய வேறொரு பலத்தைச் சொல்ல முடியுமா?’’
‘‘ஹார்டு ஒர்க்’’ என்கிறான் நந்தகுமார்.
சட்டென நான்காவது தேர்வாளர் ‘‘So you hardly work. Am I right?’’ என்கிறார்.
ஆமாம் என்பது போல் நந்தகுமார் தலையசைக்க, தேர்வாளர்கள் அத்தனை பேரும் வாய்விட்டுச் சிரித்துவிடுகின்றனர். நந்தகுமார் காரணம் புரியாமல் பரிதாபமாக விழிக்க, முதல் தேர்வாளர் சற்று ஆறுதலாகப் பேசத் தொடங்குகிறார்.
‘‘எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால், தொடர்ந்து எங்கள் நிறுவனத்திலேயே இருப்பீர்களா? நாங்கள் ஒரு வருடத்துக்கு உங்களுக்கு விதவிதமான பயிற்சிகளைக் கொடுத்த பிறகு, நீங்கள் வேறு நிறுவனத்தில் சேர்ந்தால் எங்களுக்கு அதில் பலவித நஷ்டங்கள் ஏற்படும்’’ என்கிறார் இரண்டாவது தேர்வாளர்.
‘‘என் விஷயத்தில் அப்படி நடக்காது சார். உங்கள் நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்துக்கொண்டால் தொடர்ந்து இதிலேயே பணிபுரிவேன்’’ என்கிறான் நந்தகுமார் அவசரமாக.
‘‘அப்படியானால் அடுத்து ஐந்து வருடங்களுக்கு எங்கள் நிறுவனத்திலேயே வேலை செய்வதாக ஓர் உத்தரவாதப் பத்திரத்தில் கையெழுத்திடுவீர்களா?’’ என்று நான்காவது தேர்வாளர் கேட்டவுடன், நந்தகுமார் தடுமாறுகிறான்.
‘‘அது அப்பாவைக் கேட்டுவிட்டுத்தான் சொல்லணும்’’ என்கிறான் நந்தகுமார்.
மூன்றாவது தேர்வாளர் அடுத்த கேள்வியை வீசுகிறார், ‘‘இப்போ ஒரு நிறுவன​த்திலே வேலை செய்துகிட்டிருக்​கீங்களே, நாங்க அதிகச் சம்பளம் தருகிறோம் என்பதற்காகவா உங்க வேலையை விடப்போறிங்க?’’
உடனடியான பதில் வருகிறது. நந்தகுமாரிடமிருந்து, ‘‘பணம் ஒரு பெரிய விஷயமில்லை சார். என் பாஸ் ரத்னவேலு ஒரு சாடிஸ்ட். எவ்வளவு வேலை செய்தாலும் திருப்தி அடையாதவர். அதனாலேதான் நான் வேறு வேலையைத் தேடுகிறேன்’’.
நான்கு தேர்வாளர்களும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்ள, பேட்டி தொடர்கிறது.
நந்தகுமாரின் நேர்முகம் குறித்த ஓர் விமர்சனம் இதோ:
நந்தகுமார் செய்த முதல் தவறு அவனுடைய முறை வரும்போது உள்ளே செல்லாமல், அடுத்துச் செல்வதாக வேண்டுகோள் வைத்தது. அவன் போதிய பக்குவம் இல்லாதவன் என்றும், இன்னமும் பள்ளி மாணவனின் குணம் அவனைவிட்டு நீங்கவில்லை என்றும் தேர்வாளர்கள் கருத வாய்ப்பு உண்டு.
நான்கு தேர்வாளர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ‘‘குட் மார்னிங் சார்’’ என்று சொல்ல வேண்டும் என்பதில்லை. நடுவில் இருப்பவரைப் பார்த்துப் புன்னகையுடன் ‘‘குட் மார்னிங் சார்’’ என்று கூறிவிட்டு, அப்படிக் கூறும்போதே அதே புன்னகையுடன் மீதிப் பேரையும் பார்த்துத் தலையசைக்கலாம்.
தான் ஒரு பள்ளி மாணவன் மனப்பாங்கிலிருந்து விலகவில்லை என்பதை அடுத்த சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கிறான் நந்தகுமார். ‘‘உன் சிறப்பு தன்னம்பிக்கை என்பதாக இருந்தால், அதை உரத்துச் சொல்ல வேண்டியதுதானேஎன்பதுபோல் விமர்சனம் எழுந்தபோது, ‘‘அப்படித்தான் சொல்லி ​இருக்கவேண்டும்என்பதுபோல் எதையாவது கொஞ்சம் குற்றஉணர்ச்சியுடன் அவன் ஒத்துக்கொண்டிருக்கலாம். மாறாக ஏதோ தவறைச் சரி செய்வது போல இரண்டாவது முறை உரத்துச் சொல்கிறான்.
‘‘Working hard’’ என்பதற்கும் ‘‘Hardly working’’ என்பதற்கும் நிறைய வித்யாசம் உண்டு. ‘‘I am working hard’’ என்றால் கடுமையாக உழைக்கிறேன் என்று பொருள். மாறாக ‘‘I am hardly working’’ என்றால் நான் கிட்டத்தட்ட வேலையே செய்வதில்லை என்று அர்த்தம். ஆகத் தன்னுடைய விடையினால் ‘‘தான் ஒரு கடுமையான உழைப்பாளி என்று சொல்வதற்குப் பதிலாக, தன்னால் முடிந்தவரை வேலை செய்வதைத் தவிர்க்கப் பார்ப்பேன் என்று கூறிவிடுகிறான் நந்தகுமார். அவன் தவறாகப் புரிந்துகொண்டுதான், இந்தப் பதிலைக் கூறுகிறான் என்பது நான்கு தேர்வாளர்களுக்கும் புரிகிறது. அவர்களில் யாரும் நந்தகுமாரை வேலை பார்ப்பதைத் தவிர்ப்பவன்என்று நினைத்துவிடவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் அவன் கொஞ்சம் பலவீனமானவன் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தப் பேச்சு அமைந்து விடுகிறது.
அதே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வதாக நந்தகுமார் கூறியதில் தவறு இல்லை. ஆனால், உத்தரவாதப் பத்திரம் குறித்து அவன் அவ்வளவு பதற்றம் காட்டியிருக்க வேண்டாம். வேலைக்குத் தேர்ந்தெடுத்த பிறரிடமும் இதுபோன்று பத்திரம் வாங்காமல் நந்தகுமாரிடம் மட்டும் அப்படி வாங்கிவிட மாட்டார்கள். எனவே, இதுகுறித்து பிறகு யோசிக்கலாம். அப்போதைக்கு இதற்கு அவன் ஒத்துக்கொள்வதாகக் கூறலாம்.
அல்லது மேலும் புத்திசாலித்தனமாக ‘‘எனக்கு உரிய வாய்ப்பையும், ஊதியத்தையும் உங்க நிறுவனத்திலே கொடுக்கப் போறீங்க. அப்படி இருக்கும்போது நான் வேறொரு நிறுவனத்திலே சேர வேண்டிய அவசியம் என்ன வந்துவிடும்?’’ என்று கூறலாம்.
‘‘சம்பளம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை’’ என்று நந்தகுமார் கூறுவதைத் தேர்வாளர்கள் ஏற்றுக்கொள்வது கஷ்டம். மாறாக ‘‘எனக்கு சம்பளத்தைவிட முக்கியமான வேறு சில விஷயங்கள் உண்டு’’ என்பதுபோல் அவன் கூறி இருக்கலாம்.
நந்தகுமார் செய்த மிகப் பெரிய தவறு, தான் இப்போது பணி செய்யும் நிறுவனத்தின் அதிகாரியைக் குறைகூறியது. அதுவும் சாடிஸ்ட்’ (பிறரது சோகத்தில் இன்பம் காணும் குரூர மனம் படைத்தவர்) என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. தேர்வாளர்களாக வந்திருப்பவர்களும் உயர் அதிகாரிகளாகவே இருக்க வாய்ப்பு உண்டு. தனக்குச் சமமானவர்கள் விமர்சிக்கப்படுவதை அவர்கள் எவ்வளவு ​தூரம் விரும்புவார்கள் என்பது சந்தேகம். தவிர நந்தகுமார் பணியாற்றும் நிறுவனம், அவன் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக இருக்கக்கூடும்.
தவிர, நந்தகுமார் தன் சாடிஸ்ட்மேலதிகாரியின் பெயரை வேறு தெளிவாகக் குறிப்பிடுகிறான். அந்த ரத்னவேலு என்பவர் தேர்வாளர்களில் ஒருவரின் நண்பராகக்கூட இருக்கலாம். அப்படி இருந்தால் புதிய வேலை அவனுக்குக் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதோடு, அவனது விமர்சனம் அந்த ரத்னவேலுவின் காதுகளையும் அடையக்கூடும். பொதுவாகவே நேர்முகத் தேர்வுகளில் தற்போதைய மற்றும் அதற்கு முன் பணியாற்றிய நிறுவனங்களைக் குறித்து எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.



Tuesday, 21 January 2014

நார்த் இந்தியாவில் தொழில் செய்யப் பயப்படும் தமிழர்களுக்கு

These Tamil Language inscriptions were found in China. It was found about 500 miles north of Canton, in a place called Chuan Chou. This is a port city. It was an important port city in the ancient times also.
image


image


Normally, the Tamils used to sail to Ta Kua Pa in the west coast of Thailand.
They would then take an overland journey across the Isthmus of Kra to other ports like Nakon SiTammarat or Songkla. These ports were on the east coast of Thailand. From there they would sail on to one of the ports of present day Vietnam. Then they would sail northwards to Canton. A straight sail would be a longer distance which would take them across the Bay of Bengal, Straits of Malacca, Gulf of Siam, and South China Sea.

They would have to sail around the Malay Peninsula. This would have increased their journey by more than a thousand miles and would have taken up several more months. Apart from Canton, the Tamils had gone to other places also and established their own colonies.
The merchant guilds like 'Thisai Aayiraththu AinnuuRRuvar' was very active around this part of the world.


Friday, 17 January 2014

முரடன் முத்து (பழைய சினிமா பெயர் இல்லை)

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.

ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.


அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.

இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.

அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.

இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.

அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.

அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா…

நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.

அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம்.

ஏன் அவர் நம்மைக் காட்டிலும்,

எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,

உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.

அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,

பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே,

அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.....! 

Tuesday, 7 January 2014

பரிணாம வளர்ச்சி

How Bedroom Smells After MARRIAGE
.
.
1st 3 years
Perfumes, Flowers, Chocolate, Strawberry,
Grapes. ..
.
.
After 3 YRS
Baby Powder, Johnsons Cream & Lotions,
Baby oils
·
·
After 15YRS
ZanduBalm, Vicks, Iodex, Relispray….
·
·
After 40 YRS
Agarbatti

முழுவதும் படிக்க நேரமில்லாதவர்கள் கலர் மட்டும் பார்க்க sorry படிக்க

v  மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்..ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம்
இருக்கிறான்.!
v  பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான், பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்..
v  எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்.நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு  இல்லாமலே போகிறது!
v  சாகாமல் இருக்க வாழ்கிறான், ஆனால் வாழாமலே சாகிறான்!

v  யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே,
v  நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்லஅதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில் தான் அந்த மதிப்பிருக்கு..
v  ஒண்ணைவிடஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
v  எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே, உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன் தான் பணக்காரன்!
v  நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த  சில நொடிகள் போதும்ஆனால்  அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும். நம்மை நேசிக்கும்  பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பது தான் நிஜம்
v  பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு, சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது..
v  இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்..
v  ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும், எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
v  அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்..

v  நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம், நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால்உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!

Friday, 3 January 2014

இளைங்கர்களுக்கு படிக்கட்டு, முயற்சியை மதிக்கிரவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்


போதி தருமன்

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு !!!

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān

டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).


4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.


9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
(THANKS WIKIPEDIA )
STORY : -

போதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான்.

புத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான்.

கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்பானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான்.

சீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா என் வீட்டிற்கு செல்கிறேன்என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. 

Happy new year every body


எல்லா வளமும் பெற்று சந்தோஷமாக வாழ்க.