Saturday, 29 June 2013

பிச்சை மனம் - (பிடித்தால் forward செய்க)

ஒருவர் ஒரு பிச்சைக்காரனுக்கு ரூ 10  கொடுத்தார்.  அவர் வெகு காலமாக அவனுக்குப் பிச்சை கொடுப்பார். பிச்சைக்காரன் கேட்டான் ஏன் ஐயா முன்பு ரூ 100 பின் ரூ 50 பின் ரூ 25 இப்போது ரூ 10.கொடுக்கிரீகள் என்றான்.  அதற்கு பிச்சை போட்டவர் சொன்னார் பிரமச்சாரியாக இருத்த போது 100 கொடுத்தேன். கல்யாணமான பின் 50 கொடுத்தேன். முதல் குழந்தை பிறந்த பின் 25 கொடுத்தேன் . இப்போது இரண்டாவது குழந்தை பிறந்த பின் 10 கொடுக்கிறேன் என்றார்.

 
அதற்குப் பிச்சைக்காரன் இது என்ன நியாயம்.  என் பணத்தை எடுத்து உங்கள் குடும்பத்தை வளர்க்கிரீகள் என்றான்.


இது போலத்தான் நாம் இயற்கையிடமும், நம் அரசாங்கத்திடமும் நமக்கு உதவிசெய்பவர்களிடமும், அப்பா அம்மா விடமும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
சொன்னவர் – அமிர்தானந்தமயி

Thursday, 27 June 2013

சந்தோஷ வாழ்க்கை

ஒரு குட்டையில் சிறிதளவு நீர் இருந்தது. அங்கே வந்த இரு தம்பதி யானைகளுக்கு நல்ல தாகம்.  அந்த தண்ணீர் இருவருக்கும் போதியதாக இல்லை. இரண்டும் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தன.  ஆனால் தண்ணீர் குறையவே இல்லை.

காரணம் இரண்டு யானைகளும் அடுத்த யானை தண்ணீர் குடிக்கட்டும் என்று
தண்ணீர் குடிக்காமல் குடிப்பது போல் நடித்து  விட்டுக்கொடுத்தன.

இதுதான் சந்தோஷ வாழ்க்கைக்கு அடிப்படை.


Friday, 7 June 2013

பருவ வயது

ஒரு ஞாயிற்றுக் கிழமை.

ஒரே ரூமில் தங்கியிருக்கும் நண்பர்கள்.

ஒருவன்.         மச்சி இன்று சாம்பார் வைக்கட்டுமா'  புளி குழம்பு                   வைக்கட்டுமா', வத்தல் குழம்பு  வைக்கட்டுமா',

மற்றவன்         முதலில் எதாவது வை.  பின்னால்  பெயர் வைக்கலாம்.








Tuesday, 4 June 2013

மனசுதான் எல்லாம் மச்சி

குயவன் களி மண்ணில் ஒரு பெரிய விநாயகர்  செய்து வைத்தான். அந்த வழியில் சென்றவர்கள் 

கையெடுத்து கும்பிட்டு சென்றார்கள்.  கொஞ்சநாள் கழித்து அந்த களிமண்ணையே மறுபடி 

குலைத்து ஒரு பேய் பொம்மை செய்து வைத்தான். அந்த வழியில் சென்றவர்கள் அதை பார்த்து 

பயந்து சென்றார்கள்.



கடவுள் எங்கே இருக்கிறார் ?

Sunday, 2 June 2013

50 % ஒப்புக்கொள்வீர்கள்

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் இலவச அரிசி.. ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!


3.
வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கா ன வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza
வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.
ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும்இல்லை..!!

6.
அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7.
குடிக்கும் Lemon Juice, Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது ..!!

8.
மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக் கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

9.
கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.
பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக் குடிப்போம்...!!!!