Sunday, 21 December 2014

என்னத்தை சொல்ல


ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : 


"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் " மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : 


" நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது .....


" மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் " எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடி த்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!! மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,க டைசியில் கொண்டு எழுதி வைத்தான் 


.... எமதர்மன் தூக்கத்திலிருந் து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அ


தனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்... என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!


 கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் ....... நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட .......

Tuesday, 16 December 2014

ஸ்ரீ ஆண்டாள்


அகரத்தில் ஓர் இராமாயணம்


இராமாயண கதை முழுதும் 
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
" இதுவே தமிழின் சிறப்பு.."
++++++++++++++++++++++++++++++

அனந்தனே 
அசுரர்களை 
அழித்து,
அன்பர்களுக்கு 
அருள 
அயோத்தி 
அரசனாக 
அவதரித்தான்.

அப்போது 
அரிக்கு 
அரணாக 
அரசனின் 
அம்சமாக 
அனுமனும் 
அவதரித்ததாக
அறிகிறோம். 
அன்று 
அஞ்சனை 
அவனிக்கு
அளித்த 
அன்பளிப்பு 
அல்லவா 
அனுமன்?

அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை 
அரவணைத்து 
அருளும் 
அருட்செல்வன்!

அயோத்தி 
அடலேறு,
அம்மிதிலை 
அரசவையில் 
அரசனின் 
அரியவில்லை 
அடக்கி, 
அன்பும்
அடக்கமும் 
அங்கங்களாக 
அமைந்த 
அழகியை
அடைந்தான் .

அரியணையில் 
அமரும் 
அருகதை 
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க 
அந்தோ !
அக்கைகேயி 
அசூயையால் 
அயோத்தி 
அரசனுக்கும்
அடங்காமல் 
அநியாயமாக 
அவனை 
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும் 
அபாயம்!
அரக்கர்களின் 
அரசன் ,
அன்னையின் 
அழகால் 
அறிவிழந்து 
அபலையை
அபகரித்தான்

அங்கேயும் 
அபாயம்!
அரக்கர்களின் 
அரசன் ,
அன்னையின்
அழகால் 
அறிவிழந்து 
அபலையை
அபகரித்தான்

அந்த 
அடியார்களில் 
அருகதையுள்ள 
அன்பனை
அரசனாக 
அரியணையில் 
அமர்த்தினர்.

அடுத்து 
அன்னைக்காக 
அவ்வானரர் 
அனைவரும்
அவனியில் 
அங்குமிங்கும் 
அலைந்தனர், 
அலசினர்.
அனுமன், 
அலைகடலை 
அலட்சியமாக 
அடியெடுத்து
அளந்து 
அக்கரையை
அடைந்தான்.

அசோகமரத்தின் 
அடியில் ,
அரக்கிகள் 
அயர்ந்திருக்க
அன்னையை 
அடிபணிந்து 
அண்ணலின்
அடையாளமாகிய 
அக்கணையாழியை 
அவளிடம்
அளித்தான்

அன்னை 
அனுபவித்த 
அளவற்ற 
அவதிகள்
அநேகமாக 
அணைந்தன.

அன்னையின் 
அன்பையும்
அருளாசியையும் 
அக்கணமே 
அடைந்தான் 
அனுமன்.

அடுத்து, 
அரக்கர்களை 
அலறடித்து , 
அவர்களின்
அரண்களை , 
அகந்தைகளை 
அடியோடு 
அக்கினியால்
அழித்த 
அனுமனின் 
அட்டகாசம் , 
அசாத்தியமான
அதிசாகசம்.

அனந்தராமன் 
அலைகடலின் 
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான 
அணையை
அமைத்து,
அக்கரையை 
அடைந்தான்.

அரக்கன் 
அத்தசமுகனை 
அமரில் 
அயனின்
அஸ்திரத்தால் 
அழித்தான்.

அக்கினியில் 
அயராமல் 
அர்பணித்த 
அன்னை
அவள் 
அதி 
அற்புதமாய் 
அண்ணலை 
அடைந்தாள்.

அன்னையுடன் 
அயோத்தியை 
அடைந்து
அரியணையில் 
அமர்ந்து 
அருளினான்

அண்ணல் . 
அனந்தராமனின் 
அவதார
அருங்கதை 
அகரத்திலேய 
அடுக்கடுக்காக 
அமைந்ததும் 
அனுமனின் 
அருளாலே.

If you are + 60 this essay will be sweet

தமிழ் இந்து  15/12/2014
துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது.
“வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார்.
உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன.
20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களிடம் தம்மைப் பற்றிய உயர்வான எண்ணமும் அந்த வயதுக்கே உரிய கர்வமும் நிறைந்திருக்கின்றன.
30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களிடம் அத்தகைய தற்பெருமை படிப்படியாக மறைந்து, கலக்கமும் கவலைகளும் லேசாக இடம்பெறத் தொடங்குகின்றன.
50 வயதுக்கு மேல் மூளையின் செல்கள் சிதையத் தொடங்குகின்றன. மூளையின் செயல்பாடுகள் மந்தமாகின்றன. தீவிரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சுரப்புகளின் உற்பத்தி குறைகிறது. மனதில் அமைதியும் நிறைவும் ஆசையின்மையும் நிறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 80 வயதை எட்டியவர்களின் மனதில் சுய மதிப்பீடும் சுயாபிமானமும் உச்சத்தை எட்டுகின்றன. ‘இவ்வளவு நாள் வாழ்ந்ததே சாதனை’என்ற பெருமிதம் உண்டாகிறது. அதன் பிரதிபலிப்பு முகத்தில் மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் வெளிப்படுகிறது. கடுமையான வியாதிகளும் வலி - வேதனைகளும்கூட அவர்களுடைய மனநிலையைக் குறைந்த அளவே குலைக்கின்றன.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பலருக்கு, ‘இனிமேல் அதிகாலையில் எழுந்து, அரக்கப்பரக்கக் காலக்கடன்களை முடித்துக்கொண்டு, பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க அவசர அவசரமாக ஓட வேண்டிய அவசியமில்லை’என்ற எண்ணமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது. வருமானம் குறைந்துவிட்டதே என்ற கவலைகூட ஓரளவுக்கு மேல் வருத்துவதில்லை.
புகைப்பட ஆய்வு
ஒரு கூட்டத்தின் ஒளிப்படத்தை இளைஞர்களிடம் காட்டியபோது, அவர்களின் முகங்கள் ஆர்வமில்லாமல் சற்றே சுருங்கின. அதே படத்தை முதியோர்களிடம் காட்டியபோது மலர்ந்த முகத்தோடு மகிழ்ச்சியாக அதை உற்றுப்பார்த்தனர். வயதானவர்களுக்கு துக்கங்களும் கவலைகளும் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வாழ்க்கைத் துணையை இழக்கும் இளவயதினரைப் போல முதிய வயதினர் துயரத்தில் மூழ்கி நிலைகுலைந்துபோவதில்லை.
தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அச்சமும் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. வறுமையும் தனிமையும்கூட அவர்களை அச்சுறுத்துவதில்லை. வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். முயன்றாலும் முடியாது என்ற இயலாமைகுறித்த முழுமையான புரிதலாலும், இனி கவலைப்பட்டு ஏதும் சரியாகிவிடாது என்ற பக்குவத்தாலும் அவர்கள் எளிதில் இயல்புநிலைக்கு வந்துவிடுகிறார்கள். கவலைகள் குறைகின்றன. மகன், மகள் ஆகியோருக்கு இனி தங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் அவசியமில்லை என்ற யதார்த்தமும் பலருக்குக் கவலைகளைக் குறைத்துவிடுகின்றன. தங்களுடைய குழந்தைகளில் சிலரின் வாழ்க்கை சரியாக இல்லாவிட்டால், ஆரம்பத்தில் கவலைப்படும் முதியவர்கள் காலப்போக்கில், அது அவர்களுடைய தலையெழுத்து என்று கவலையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர்.
மன இறுக்கம் இல்லை
ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்கள் மன இறுக்கத்தில் வாழ்வதில்லை. இன்றைய பொழுது நல்ல பொழுதாகக் கழிந்தால் போதும் என்று நினைக்கும் முதியவர்கள், ‘நாளைய பொழுது நம்மிடம் இல்லை’என்று விட்டுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளின் முத்தம், கொள்ளுப்பேரன், பேத்திகளின் ஸ்பரிசம் போன்றவை மூளையில் ஆக்சிடோசின் என்ற ரசாயனத்தின் சுரப்பை அதிகப்படுத்துவதால் மெய்ம்மறந்து ரசித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
உடலுக்கு ஏற்படும் மூப்பு வேறு, உணர்வுகளுக்கு ஏற்படும் மூப்பு வேறு. அவை இரண்டும் ஒன்றல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். வயதாக வயதாக உடல் வலுவிழப்பதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே சமயம், சிறிய செயல்கள்கூட அவர்களுக்கு அதிகமாக மகிழ்ச்சியை அளிக்கின்றன. “நான் இளைஞனாக இருந்தபோது வரைந்த ஓவியத்தைவிட 70 வயதான பிறகு படைத்த ஓவியங்கள்தான் பன்மடங்குச் சிறப்பாக அமைந்தன” என்றார் ஒரு பிரபல ஓவியர். அதற்கு அவருடைய அனுபவமும் நீண்டகாலப் பயிற்சியும்கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.
துயரக் கணைகள் துளைப்பதில்லை
அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர், தம்மை நோக்கி வரும் வேகப் பந்துகளை வெகு சாமர்த்தியமாகத் திருப்பிவிடுவதைப் போல முதியவர்கள் தங்களை நோக்கி வரும் துயரக் கணைகளை எளிதாகத் திருப்பிவிடும் வல்லமை பெற்றுவிடுகிறார்கள். பெற்றோருக்கு நடுத்தர வயதாக இருக்கும்போது பதின்ம வயதுள்ள குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள் சிறிது காலம் கழித்துக் குறைந்துவிடுகிறது. பெற்றோர், குழந்தைகள் என்று இரு தரப்பாருக்குமே வயது அதிகமாவதால் முதிர்ச்சியும் மனப் பக்குவமும் அதிகமாகிறது. முதுமைக் காலத்தில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் நண்பராகவும் இருப்பது எளிதாகிவிடுகிறது.
பிள்ளைகளின் சிந்தனைகளையும் செயல்களையும் பற்றற்ற கண்ணோட்டத்திலும், பற்றுள்ள பார்வையுடனும் ஒரே நேரத்தில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. தன்னிடம் ஆலோசனை கேட்டால் மகிழ்ச்சியடைகிறார்கள். கேட்காவிட்டால் கோபமோ வருத்தமோ படுவதில்லை.
அப்பா, அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வோம் என்று பிள்ளை தன் மனைவியிடம் சொல்வது காதில் விழுந்தாலே பெற்றோர் மனம் பூரித்துவிடுகிறது. குடும்ப விவகாரங்களில் முழுமையாகப் பங்கேற்பது அல்லது வெறும் பார்வையாளராக இருப்பது ஆகிய இரண்டுமே சாத்தியமாகிறது. நிதானம் சார்ந்த கிட்டப்பார்வையும் அனுபவம் சார்ந்த தொலைநோக்குப் பார்வையும் முதியவர்களுக்கு ஏக காலத்தில் வாய்க்கின்றன.
வயது முதிர முதிர தோல்விகள் மற்றும் இழப்புகளின் வெம்மை பெரியவர்களிடத்தில் கூர் இழந்துவிடுகிறது. அற்ப விஷயத்துக்கெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற நிதானம் வந்துவிடுகிறது. பலனை எதிர்பாராதே, கடமையைச் செய் என்றில்லாமல் - பலன் அதிகமா குறைவா என்று பார்த்துச் செய் என்கிற பக்குவம் வந்துவிடுகிறது. தனித்திறமைகளின் தரம் கூடுகிறது. கவிஞர்களுக்குச் சொல் வளமும் ஆளுமையும் மெருகேறுகின்றன. எழுத்தாளர்களின் படைப்புகளில் தீவிரத்தன்மை குறைந்து கருத்தாழமும் சொற்சிக்கனமும் கைவசப்படுகின்றன.
வயதால் கனியும் மருத்துவர்கள்
டாக்டர்கள் வயதாக வயதாக அதிக சோதனைகளுக்கு அவசியமில்லாமல் நோயின் தன்மை, தீவிரம் போன்றவற்றைக் கணித்துவிடுகிறார்கள். நோயாளியிடம் பரிவும் கனிவும் அதிகமாகிறது. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் வயது அதிகமானால் கண்டிப்பைக் குறைத்துக்கொண்டு, மாணவர்களின் குறும்பை ரசிக்கும் பக்குவத்தை அதிகம் பெற்றுவிடுகிறார்கள். மேலதிகாரிகளில் பலர், மிடுக்கையும் அதிகார தோரணையையும் குறைத்துக்கொண்டு, சகாக்களின் சிறிய தவறுகளை மன்னித்து, தக்க ஆலோசனைகளைக் கூறத் தொடங்குகிறார்கள். பழைய விரோதங்கள் மறக்கப்படுகின்றன, பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன.
வாழ்க்கைப் பயணம் நீள நீள ஆங்காங்கே சுமைகள் கழிக்கப்பட்டுப் பயணிப்பது எளிதாகிறது. வயதாக வயதாகப் பல விஷயங்கள் மறந்துபோவது பெரிய பிரச்சினையாகத் தெரிவதில்லை. வயதாகிவிடுகிறபோது எது, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்கிற புரிந்துணர்வு ஏற்படுகிறது. சின்ன வயதில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என்னும் நினைவு இளையவர்களிடம் பரிவுகாட்ட வைக்கிறது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அவசரம் குறைந்து நிதானம் கூடுகிறது.
தமது எதிர்காலத்தைப் பற்றி முதியவர்கள் சிந்தனைகூடச் செய்வதில்லை. அவர்களுக்குத் தற்காலம்தான் நிதர்சனம். உடம்பு முடியவில்லையா, ஓய்வு எடு. நடக்க முடியவில்லையா, உட்காரு. உட்காரக்கூட முடியவில்லையா, படுத்துக்கொள். இதுதான் அவர்களுடைய கொள்கை. உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அந்தக் கடமைகளையெல்லாம் இளைய தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.
ஓவியர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் முதுகிழவர்களையும் தொண்டு கிழவிகளையும் தேடிப் பிடித்துப் படமாக்குவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும். அந்த முகங்களில் அமைதியையும் கருணையையும் அழகையும் அவர்களால் எளிதில் அடையாளம் காண முடிந்திருக்கிறது.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

நெட்டில் படித்தது ஆண் பெயரில் பெண் எழுதியது என்று நினைக்கிறன்.

# சந்தோஷமான தருணங்களை (தயவு செய்து படியுங்கள்)

# பன்னிரண்டு மணிக்கு கதவு திறந்தால், முகத்தில் கேக் பூசிக் கத்துகிறார்கள் நண்பர்கள்.

#
அம்மா அப்பாவுக்கு எண்பதாம் கல்யாணம் நடக்கிறது. 
# பெண்ணுக்கும் பையனைப் பிடித்திருக்கிறது.

' ‪#தாயும் 
சேயும் நலம்' என்று டாக்டர் சொல்கிறார்.

#
பலவருஷமாக தேடிக் கொண்டிருந்த பள்ளிக்கூட நண்பன் பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் அனுப்புகிறான்.

#
முகம் பார்க்கிறக் கண்ணாடியில் ரோஜாப் பூவை ஒட்டி வைத்து விட்டுச்
சென்றிருக்கிறான், மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் போது வெளியூர் புறப்பட்டுப் போன கணவன்.

#
அடர்ச்சிவப்பு நிறக் காட்டுப்பூ ஒன்று மலர்கிறது.

#
கிரீட்டிங் கார்டைத் திறந்தால் பாட்டுக் கேட்கிறது.

#பிரமாதமான ஒருக் கவிதையைப் படித்தவுடன் ஒருக் கண்ணீர்த்துளி எட்டிப்
பார்க்கிறது.

‪#ஒரு 
மயில் தோகை விரிக்கிறது.

#
கையில் மருதாணி வைத்திருக்கிற விடிந்தால் மணம் ஆகப் போகிறப்
பெண்ணுக்கு ஊட்டி விடுகிறார் அப்பா.

‪#முதல் 
போட்டு சொந்தமாகப் புதுத் தொழில் தொடங்குகிறான் ஒருத்தன்.

#
ஒருக் குழந்தைத் தூக்கத்தில் சிரிக்கிறது.

#
வானம் சட்டென்று மூடுகிறது.

#
எல்லா தேவதைகளும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள்.


#
இவ்வுலகில் இருக்கும் சந்தோஷமானதருணங்களை அனைத்தும் கண்
முன்னே வந்து செல்கிறது......

Sunday, 7 December 2014

யோசித்தால் இப்படி யோசிக்கவேண்டும்

ஒரு இஞ்சின் டிரைவராக வேலை பார்த்து வந்தார் நம்ம வீர்சிங். ஒரு நாள் சுமார் 600 பேர்களுடன்
சென்று கொண்டிருந்த டிரெயினை திடீரென்று தடம் விட்டு இறக்கி விட்டார். நல்ல வேளையாக
ஒருவருக்கும் பெரிய அடி இல்லாமல் தப்பித்தனர். மேல் அதிகாரிகள் உடனே வீர்சிங்கை சஸ்பெண்ட்
செய்து உடனடி விசாரணைக்கும் உத்தரவு இட்டனர்.
விசாரணையின் போது வீர்சிங் கூறினார்,'' நான் வேகமாக வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தபோது,
திடீரென்று ஒரு ஆசாமி தண்டவாளத்தில் ஒடிக்கொண்டிருந்தான்.எவ்வளவோ சைரன் கொடுத்தும்
அவன் தடத்தை விட்டு இரஙகவே இல்லை............ அதனால்.........''என்று இழுத்தார்.
அதிகாரிகளுக்கு வந்த கோபத்துக்கு அலவே இல்லை,''என்னையா பைத்தியம் மாதிரி பேசற, வண்டியில்
இருக்கிற 600 பேர் உசிரைப்பார்ப்பியா, இல்லை அந்த ஒரு ஆளுக்காக பார்ப்பியா? அப்பிடியே அவன் மேலே
ஏத்திட்டு போயிண்டே இருக்கவேண்டியது தானே/ அதை விட்டு இப்படியா வண்டியை கீழே இறக்குவது?''என்றனர்.
வீர்சிங்கோ மிகவும் பணிவாக,'' சார், நீங்கள் சொன்ன முடிவுக்கு நான் உடனே வந்துவிட்டேன்'' என்றார்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.'' அப்புரம் வண்டி எப்பிடிய்யா லைனை விட்டு இறங்கியது"" என்று கேட்டார்கள்.
அதற்க்கு வீர்சிங்,'' சார் அவன் மேலே வண்டியை ஏத்தனும் என்று தான் பார்த்தேன். ஆனால் அவன் திடீரென்று
லைனை விட்டு தரையில் ஓட ஆரம்பித்தான் சார்.....அதனால் தான்.............''

Friday, 5 December 2014

இந்தியாவும் ரோல்ஸ்ராய் காரும் :


பாட்டியாலாவை சேர்ந்த மஹாராஜா பூபிந்தர் சிங் புத்தம் புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அந்த ஆர்டரை ஏதோ காரணம் காட்டி ரோல்ஸ்ராய்ஸ் தட்டிக் கழித்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர் 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குதிரை சாணம் அள்ள பயன்படுத்தினார்...தன்னிடம் இருந்த பழைய ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்தையும் பாட்டியாலா நகரத்தில் குப்பை வண்டிகளாக்கினார். இங்கிலாந்து ராணி பயன்படுத்தும் அதே ரக கார்களை இந்திய மகராஜா குப்பை வண்டியாக பயன்படுத்தியது .இங்கிலாந்து செய்தித்தாள்களில் வந்து பெரும் அவமானத்தை கொடுத்தது..இங்கிலாந்து அரசே நேரடியாக ரோல்ஸ்காரை வழங்கி,மன்னிப்பும் கேட்டது...
பரத்பூரிலும் அதே கதைதான்:
இதேபோன்று, பரத்பூரை சேர்ந்த மஹாராஜா ஒவ்வொரு முறையும் 3 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து வாங்குவார். ஒரு முறை கார் பழுதடைந்ததை சரிசெய்ய ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், மெக்கானிக்குகளை அனுப்ப ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது. . பாட்டியாலா போன்றே பழுது ஏற்பட்ட கார்களை குப்பை வண்டிகளாக்கப் போவதாக பரத்பூர் மஹாராஜா மிரட்டினார். இதனால், அதிர்ந்து போன ரோல்ஸ்ராய்ஸ் உடனடியாக மெக்கானிக் குழு ஒன்றை அனுப்பி கார்களை சரிசெய்து கொடுத்தது.
அல்வார் மஹாராஜா:
புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதற்கு விற்பனை பிரதிநிதியை அணுகியுள்ளார். ஆனால், புதிய காரை வழங்க முடியாது என அந்த ஆங்கிலேயர் ஏளனமாக தெரிவித்ததால் சினங்கொண்டார்ஜெயசிங் ராஜா. உடனடியாக, 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் போட்டார்.10 கார்கள் என்ற சந்தோஷத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் சம்மதித்து கார்களை அனுப்பியிருக்கிறது. அந்த 10 புதிய கார்களும் கையில் கிடைத்தவுடன் அரண்மனையின் ஆஸ்தான ஆசாரிகளை கூப்பிட்டார். அனைத்து கார்களிலும் இருக்கும் கூரையை பிடுங்கி எறிந்துவிட்டு குப்பை வண்டியாக மாற்றினார். இது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த சம்பவம்.
செருப்பு கலரில் ரோல்ஸ் கார்:
ஜாம்நகர் மஹாராஜா செய்த காரியம் அனைவரையும் திகைக்க வைக்கிறது. டிரெஸ் கலருக்கு தகுந்தவாறு பொட்டு, வளையல் போட்டுக் கொள்வது போன்று தனது மனைவியின் செருப்பு கலரில் கார் வேண்டும் என்று ரோல்ஸ்ராய்ஸ்க்கு ஆர்டர் செய்துள்ளார். செருப்பு கலரில் கொஞ்சமும் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காக, ராணியின் செருப்பை ரோல்ஸ்ராய்ஸ் ஆலைக்கு அனுப்பி காரை வாங்கியிருக்கிறார்.

பூமியின் தலைஎழுத்து அவ்விட மக்களை படுத்துகிறது


எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாலஸ்தீனப் பகுதியை ஆக்கிரமித்து இருக்கு. அந்த நாட்டில் முஸ்லிம், கிறிஸ்த்துவர், யூதர், மற்றவர்கள் இருக்கிறார்கள்.  அதுபோல் இஸ்ரேலிலும் எல்லோரும் இருக்கிறார்கள்.

பாலஸ்தினத்தில் முஸ்லிம் அதிகம்.  இஸ்ரேலில் யூதர்கள் அதிகம்.

உலகின் மற்ற பகுதிகள் போல் இங்கே மதவெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. எனவே காலம்பூராவும் அமைதி இல்லை.


உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?)
ஒரு காலத்தில் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு மத மற்றும் தேசிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது பாலஸ்தீனத்தில்தான். ‘’யூதர்களின் புனிதத் தந்தை’ எனப்படும் ஏபிரஹாம் அங்கு வாழ்ந்திருக்கிறார். ரோமானிய அரசர்கள் யூதர்களை அங்கிருந்து ஓட ஒட விரட்டினார்கள்’’ என்கிறது சரித்திரம். எனவே தங்களது ஒருகாலத்திய தாய்நாடான பாலஸ்தீனத்தைக் குறி வைக்கத் தொடங்கினார்கள் செல்வாக்கு மிக்க யூதர்கள்.
ஐரோப்பாவில் உள்ள யூதர் கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே ‘’ஜியோனிசம்’’ என்ற கொள்கை அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். ‘’பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதிதான் எங்கள் தாயகம். அப்படித்தான் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகிறது. எனவே அந்தப் பகுதி யூதர்களின் சொந்த நாடாக வேண்டும்’’ என்று முடிவெடுத்த அவர்கள் சாரிசாரியாக பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினார்கள்.
வல்லரசு நாடுகள் யூதர்களின் தனிநாடு ஏக்கத்தைப் போக்க முன்வந்தன. 1947ல் ஐ.நா. ஒரு திட்டத்தை அறிவித்தது ‘’பாலஸ்தீனம் இரண்டாக்கப்பட வேண்டும். ஒரு பகுதி அரபு மக்களுக்கு. மற்றொன்று யூத இனத்தவருக்கு’’.
அதற்கு அடுத்த வருடமே, மேற்கத்திய நாடுகளின் பெரும் ஆதரவோடு, யூதர்களுக்காக ஒரு தனிநாடு உருவானது - அதுதான் இஸ்ரேல்!
முதலாம் உலகப் போருக்குப் பிறகு ‘லீக் ஆஃப் நேஷன்ஸின்’ (அந்த நாளைய ஐ.நா. சபை) ஆணைப்படி 1922லிருந்து பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு அளிக்கப்பட்டது. (இதனால் அந்தப் பகுதி ‘பிரிட்டிஷ் பாலஸ்தீனம்’ என்றும் அழைக்கப்பட்டது). தனது இந்த ஆணையை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் தான் ஐ.நா. அந்தப் பகுதியை இரண்டாகப் பிரித்தது.
அப்படிப் பிரித்தபோதே அங்கு சிக்கல்கள் முளைக்க வாய்ப்பு உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே துல்லியமாகத் தெரிந்திருந்தது. அதனாலதான் ஜெருசலேம்-பெத்லகேம் அடங்கிய பகுதியைப் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று அறிவித்து , அந்தச் சிறிய பகுதி மட்டும் தன்னால் நிர்வகிக்கப்படும் என்றும் ஐ.நா. தெரிவித்தது.
வெளியே இஸ்ரேலின் பகுதி, அதற்குள்ளே பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி, அதற்கும் உள்ளாக ஜெருசலேம் என்று அமைந்திருந்தது. 1948 ஆகஸ்ட்டுக்குள் பிரிட்டன் தன் ராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்தை வாபஸ் பெறவேண்டும். அதே ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் புதிய நாடுகள் உருவாக வேண்டும். இதுதான் ஐ.நா.வின் நிபந்தனை.
வரலாறு, அரசியல் என்பதோடு நிறுத்திக் கொள்ள முடியாமால் மதம் என்ற மிக முக்கியமான கோணம் இந்த நாடுகளின் பகைமைக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் வெளியாகும்போதெல்லாம் அதை அரசியல் பகைமை போலவே நாளேடுகள் வெளியிட்டாலும், நீறுபூத்த நெருப்பு போல இதன் அடித்தளமாக இருப்பது மதம்.
ஏபிரகாமை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளில் வளர்ந்த மதங்கள்தான் யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே. ஆனால் காலப் போக்கில் இவை ஒன்றுக்கொன்று கடுமையான எதிரிகள் ஆயின. இப்போது இஸ்ரேலின் வசம் உள்ள ஜெருசலேம் இந்தப் பகைமைக்கு மையப் புள்ளியாகிவிட்டது. மூன்று மதங்களின் முக்கிய சங்கமங்கள் நடைபெறும் நகரம் ஜெருசலேம்.
ஜெருசலேம் - இது பாலஸ்தீனத்தின் தலைநகர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள இஸ்ரேல் தயாரில்லை. ஜெருசலேம் என்பதை ‘எதிரணியினரின்’ தலைநகராக ஏற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல, பாலஸ்தீனத்தை ஓர் அதிகாரபூர்வமான நாடாக ஏற்றுக் கொள்ளவே இஸ்ரேல் தயாரில்லை!
யூதர்களுக்கு மிக முக்கியமான புனிதத்தலம் ஜெருசலேம். வெளிநாடுகளில் இருக்கும் யூதர்கள்கூட பிரார்த்தனை செய்யும்போது இந்த நகரம் இருக்கும் திசையை நோக்கிதான் வணங்குவார்கள். கி.மு. பத்தாம் நூற்றாண்டிலிருந்தே இந்த நகரில் யூதர்கள் அதிக அளவில் வசித்தனர். இந்த நகரில் உள்ள ஆலயம் (டெம்பிள் மவுண்ட்) யூதர்களுக்கு மிக முக்கியமானது. தங்கள் விவசாய விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை இந்த ஆலயத்துக்குக் கொண்டு வந்து (சமைத்தோ அப்படியேவோ) உண்ண வேண்டும் என்கிறது யூதர்களின் புனித நூல். அதிக அளவு என்றால் பிறருடன் பங்கிட்டுக் கொள்ளலாம்.
மன்னன் சாலமனால் கி.மு. 957ல் எழுப்பப்பட்டது இந்த ஆலயம். யூதர்கள் பலி செலுத்தும் இடம் என்றால் அதிகாரபூர்வமாக இது ஒன்றுதான். சரித்திரத்தில் இந்த ஆலயம் முழுவதுமாக இடிக்கப்படுவதும், பிரமாதமாக மீண்டும் எழுப்பப்படுவதும், மீண்டும் இடிக்கப்படுவதும், உருவாக்கப்படுவதும் என்று பலமுறை நடந்திருக்கிறது. என்றாலும் புனிதத் தலம், புனித ஆலயம் என்கிற ஆழமான நம்பிக்கை யூதர்களுக்கு வேரோடு இருப்பதால் ஜெருசலேம் நகரை அவர்களால் வேறுபடுத்திப் பார்க்கவே முடியவில்லை.
அதே சமயம் கிறிஸ்தவ மதமும் ஜெருசலேம் நகரோடு நீரும் செம்புலச் சேறும்போல கலந்துள்ளது. குழந்தையாக இருக்கும் போதே ஏசுநாதர் அழைத்துவரப்பட்ட இடம் இது. ஜெருசலேம் நகரில் நடைபெற்ற திருவிழாக்களை ஏசுநாதர் கண்டதாகக் கூறுகிறது பைபிள். இங்குள்ள புனித ஆலயத்தை (யூதர்கள் கொண்டாடும் அதே ஆலயம் தான்!) ஏசுநாதர் சுத்தம் செய்திருக்கிறார்.
ஏசுநாதரின் இறுதி உணவு மிகப் பிரபலமானது. அது நடைபெற்றது இந்த நகரில்தான். ஏசுநாதர் மீதான வழக்கு நடைபெற்றதும் இங்குதான். அவர் சிலுவையில் அறையப்பட்டது ஜெருசலேம் நகருக்கு மிக அருகிலுள்ள ஒரு பகுதியில். அவர் புதைக்கப்பட்ட இடமும், உயிரோடு மீண்டு வந்த இடமும்கூட ஜெருசலேம்தான்.
ஜெருசலேம் நகரிலுள்ள ஒரு பாறையின் மீது நின்றபடிதான் முகம்மது நபிகள் சொர்க்கத்துக்குச் சென்றாராம். குரானில் ஜெருசலேம் நகர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரும் விளக்கங்கள் ஜெருசலேம் நகரைக் குறிப்பிடுவதாகவே உள்ளனவாம். ‘’மிகத் தொலைவிலுள்ள மசூதி என்று குரானில் குறிக்கப்படுவது ஜெருசலேம் நகரிலுள்ள மசூதிதான். அங்கு தான் இஸ்லாமின் பிற தூதர்களை அவர் சந்தித்தார். ஏபிரஹாம், டேவிட், சாலமன் போன்று ஜெருசலேம் நகரோடு தொடர்பு கொண்டவர்கள் முஸ்லிம்களுக்கும் முக்கியமானவர்கள்தான்.
முஸ்லிம்களுக்கான முதல் வழிபாட்டு திசையாக விளங்கியது ஜெருசலேம் தான். மெக்காவில் இருக்கும்போது முஸ்லிம்கள் ஜெருசலேம் உள்ள திசையை நோக்கிதான் வணங்குவார்கள். தொடக்கத்தில் மெதினாவிலுள்ள மசூதிகள்கூட ஜெருசலேம் உள்ள திசையை நோக்கியே கட்டப்பட்டன. (பின்னர் இவை மெக்காவை நோக்கி கட்டப்பட்டன). நபிகள் நாயகத்துக்குப் பிறகு அவரு டைய பல தோழர்களும், சீடர் களும் ஜெருசலேம் நகரில் வாழ்ந்து மறைந்தனர். அவர்கள் புதைக்கப்பட்டது இந்த நகரில்தான்.
ஆக வெறும் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பு கூட இல்லாத ஜெருசலேம் நகரில் யூத ஆலயம், மசூதி, மாதாகோவில் என்று பெரும் சரித்திரச் சிறப்பு பெற்ற பல மதச் சின்னங்கள் அமைந்துவிட்டன. பிரச்னைகள் கிளம்பாமல் இருந்தால்தானே அதிசயம்?
இப்போது அந்தப் பிரபல ஆலயத்தில் வழிபாடு செய்பவர்கள் யார்? ஒரு காலத்தில் பிரம்மாண்ட யூத ஆலயமாக இருந்து பின்னர் தரைமட்டமான அதன் கீழ்த் தளத்தில் யூதர்கள் இப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள். அங்கு இதற்காக ஒரு பெரிய அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் தளத்தில் இருக்கிறது ஹரம் அல் ஷாரிஃப் (இதற்குப் பொருள் ‘புனிதமான சரணாலயம்’). மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அடுத்ததாக இஸ்லாமிய மார்க்கத்தினரின் மூன்றாவது புனிதத் தலம் இதுதான். அதாவது இங்குள்ள தங்கத்தால் மூடப்பட்ட மேற்கூரை.
யூதர்கள் கட்டடத்தின் மேல் பகுதிக்குச் சென்று தங்கள் பிரார்த்தனைகளை நடத்த வேண்டுமென்று கோரி வருகிறார்கள். பழைய ஆலயத்தில் அப்படித்தானே அவர்கள் வழிபாடு இருந்தது! ஆனால் முஸ்லிம்கள் மறுக்கிறார்கள்.
ஐ.நா.வின் கெடு முடிவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தன்னை தனிச்சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. அரபு நாடுகள் போர்க் கொடி உயர்த்தின. எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாலஸ்தீனப் பகுதிக்குள் நுழைந்தன. அங்கிருந்தபடியே யூதர்கள் குடியிருப்புகளின்மீது தாக்குதல்களைத் தொடங்கின.

அளவில் சின்ன நாடு. அதுவும் அப்போதுதான் உருவான நாடு. அப்படியிருந்தும் இஸ்ரேலினால் எப்படி பல்வேறு திசைகளிலிருந்து தாக்குதல் நடத்திய அரபு நாடுகளை சமாளிக்க முடிந்தது? இரண்டு காரணங்கள். ஒன்று, அமெரிக்காவிடமிருந்து வந்து சேர்ந்த நவீன போர்க்கருவிகள். இரண்டு