# சந்தோஷமான தருணங்களை (தயவு செய்து படியுங்கள்)
# பன்னிரண்டு மணிக்கு கதவு திறந்தால், முகத்தில் கேக் பூசிக் கத்துகிறார்கள் நண்பர்கள்.
# அம்மா அப்பாவுக்கு எண்பதாம் கல்யாணம் நடக்கிறது.
# பெண்ணுக்கும் பையனைப் பிடித்திருக்கிறது.
# பலவருஷமாக தேடிக் கொண்டிருந்த பள்ளிக்கூட நண்பன் பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் அனுப்புகிறான்.
# முகம் பார்க்கிறக் கண்ணாடியில் ரோஜாப் பூவை ஒட்டி வைத்து விட்டுச்
சென்றிருக்கிறான், மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் போது வெளியூர் புறப்பட்டுப் போன கணவன்.
# அடர்ச்சிவப்பு நிறக் காட்டுப்பூ ஒன்று மலர்கிறது.
# கிரீட்டிங் கார்டைத் திறந்தால் பாட்டுக் கேட்கிறது.
#பிரமாதமான ஒருக் கவிதையைப் படித்தவுடன் ஒருக் கண்ணீர்த்துளி எட்டிப்
பார்க்கிறது.
# கையில் மருதாணி வைத்திருக்கிற விடிந்தால் மணம் ஆகப் போகிறப்
பெண்ணுக்கு ஊட்டி விடுகிறார் அப்பா.
# ஒருக் குழந்தைத் தூக்கத்தில் சிரிக்கிறது.
# வானம் சட்டென்று மூடுகிறது.
# எல்லா தேவதைகளும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
# இவ்வுலகில் இருக்கும் சந்தோஷமானதருணங்களை அனைத்தும் கண்
முன்னே வந்து செல்கிறது......
No comments:
Post a Comment