Friday, 6 March 2015

ரத்த கண்ணீர் வருகிறது. 1000 வருடங்களுக்கு முன் இந்திய எப்படி பாடுபட்டிருக்கும் ?


5 hrs · Edited · 
ஈராக்கின் பழங்கால நகரை அழிக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்; அகழ்வாராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி
================================================
ஈராக்கின் மிகப் பழமையான அசிரியன் நகரமான நிம்ருத் நகர் கனரக இயந்திரங்களைக் கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டுவருகிறது.
அகழ்வாராய்ச்சியாளர்களையும் கலாச்சாரத் துறை அதிகாரிகளையும் இந்நிகழ்வு அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அந்தப் பழமையான நகரை வியாழக்கிழமையன்று இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் அழிக்கத் துவங்கினர் என ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழங்காலத்துக் கோவில்களும் சிலைகளும் "பொய் கடவுள்கள்" என்று தெரிவித்திருக்கும் ஐஎஸ், அவை நொறுக்கப்பட வேண்டியவை என்று கூறியுள்ளது.
கி.மு. 13வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட நிம்ருத் நகரம், மோசுல் நகருக்குத் தென்கிழக்கில் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
அங்கே கிடைத்த பல கலைச்சின்னங்கள், பாக்தாதிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் அருங்காட்சியகங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டன. இருந்தபோதும் பெருமளவிலான கலைச்சின்னங்கள் இன்னும் அங்கேதான் இருக்கின்றன.
நிம்ருத் என்பது மிகப்பெரிய பகுதி என்பதால், தீவிரவாதிகள் முழு பகுதியையும் அழித்துவிட்டார்களா என்பது இன்னும் தெரியவில்லை.
"நிம்ருத் பழங்கால நகரத்திற்கு வந்த ஐஎஸ் உறுப்பினர்கள், அங்கிருந்த விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்தனர். பிறகு, அந்த இடத்தைத் தரைமட்ட மாக்கிவிட்டனர் " என உள்ளூர் பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் ராய்ட்டர் நியூஸ் ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளார்.
"சிலைகள், சுவர்கள், கோட்டைகள் இங்கே இருந்தன. ஐஎஸ் அனைத்தையும் அழித்துவிட்டது" என்று அவர் கூறினார்.
"ஈராக்கின் பாரம்பரியத்தின் மீது நடத்தப்படும் மற்றொரு மிகப்பெரிய தாக்குதல்" என ஈராக்கிற்கான ஐநா கலாச்சாரப் பிரிவின் இயக்குனர் அலெக்ஸ் ப்ளேத் தெரிவித்துள்ளார்.
"அவர்கள் எங்கள் வரலாற்றையே அழிக்கிறார்கள்" என ஈராக்கைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளரான டாக்டர் லாமியா அல் கய்லானி பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஐஎஸ் வெளியிட்ட ஒரு வீடியோவில் மோசுல் நகர அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களை சுத்தியல்களால் தீவிரவாதிகள் நொறுக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதனை போர்க் குற்றம் என ஐநா கூறியிருந்தது.
நிம்ருத் நகரும் அகழ்வாராய்ச்சியும்
-------------------------------------------------------------
டைக்ரிஸ் நதியின் கரையில் அமைந்திருக்கும் நிம்ருத் நகரம் மிகப் பழமையானது. அஸிரியன் காலத்தின் நடுப்பகுதியில், அதாவது கி.மு. 1,600ல் இந்த நகரத்திற்கு கல்ஹு என்று பெயர். பழைய ஏற்பாட்டில் கலா என்று குறிப்பிடப்படும் பகுதி இதுதான்.
மெசபடோமியாவின் வடபகுதியிலிருந்து அசிரியர்களின் ஆதிக்கம் இருந்தது. தற்போதைய ஈராக், சிரியா, துருக்கி நாடுகளில் சில பகுதிகளை உள்ளடக்கிய இடம் இது.
150 ஆண்டுகளாக நிம்ருத் அசிரியாவின் தலைநகராக இருந்து, பிறகு வீழ்ச்சியைச் சந்தித்தது.
1840களில்தான் முதன் முறையாக இப்பகுதியில் ஐரோப்பியர்களால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முழு அரண்மனைகள், சிலைகள், சிறிய அளவிலான கலைப்பொருட்கள் இங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்டன.
பிறகு, பல ஆண்டுகளுக்கு அகழ்வாராய்ச்சி ஏதும் நடக்கவில்லை. 1949ல் சர் மாக்ஸ் மல்லோவன் (எழுத்தாளர் அகாதா கிறிஸ்டியின் கணவர்) என்பவர், புதிதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.
நிம்ருத் அண்ட் இட்ஸ் ரிமைன்ஸ் என்ற பெயரில் இது குறித்து புத்தகம் ஒன்றையும் அவர் எழுதினார்.
பிறகு, பிற அகழ்வாராய்ச்சியாளர்களும் பணிகளைத் தொடர்ந்து செய்தனர். குறிப்பாக 1970களில் அந்தப் பகுதியில் இருக்கும் பிற கலைப்பொருட்கள், மிகப் பெரிய அளவில் புகைப்படங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. அவற்றில் பல தற்போது அழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment