Saturday, 18 June 2016

*Good Morning*

Worth Read..👇👇

Actor DILIP Kumar says...

"At the peak of my career,
I was once travelling by
Airplane. The passenger
next to me was elderly.
Dressed in a simple shirt
and pants, he appeared
middle class but seemed
to be well educated.
Other passengers kept
glancing at me, but this
gentleman appeared to be
unconcerned of me...
He was reading his
newspaper, looking out of
the window, and when tea
came, he sipped it quietly.
Trying to strike a conversation,
I smiled. The man courteously
smiled back and said 'Hello'.
We got talking and I brought
the subject to cinema and
asked, 'Do you watch films?'
The man replied, 'Oh, very few.
I did see one many years ago.'
I mentioned that I worked in
films myself. The man said,
'Oh, that’s nice. What do you
do?'  I replied, 'I am an actor '
The man nodded, 'Oh,  that's
wonderful!'  That was it...
When we landed, I held out
my hand and said,
'It was good to travel
with you. By the way,
my name is DilipKumar !'
The man shook my hand
and smiled, 'Thank you...
I am J. R. D. Tata !'
I learned,
no matter how big you are,
there is always
someone *bigger*.
Be humble.
It costs nothing.”
 -DilipKumar
எங்கே சொர்க்கம் ......
குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.
என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.
என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.
புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்.

ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.

*உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.
உலகம் உனக்கு சொர்க்கமாகும்!* என்றார், குரு.

படித்து ரசித்து பகிர்ந்தேன் ....

Friday, 17 June 2016

மோசசின் சர்பத்

குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்துக் கொண்டு பாஸ்ட்டர் கூறினார்.
" உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டது. இன்றுமுதல் நீ பரிசுத்தமானவனாகிறாய், ''மோசஸ்' என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்யம் செய்துகொடு மோசஸ்".
"சத்யம் பாஸ்ட்டர் இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?"
"தாராளமாக எத்தனை தடவ வேணும்னாலும் குடிக்கலாம்"
ஓகே பாஸ்ட்டர்.
மோசஸான குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு புல் பாட்டில் விஸ்கியை எடுத்து தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்றுமுறை முக்கி எடுத்துக்கொண்டு கூறினான்.
" உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவி மாற்றப்பட்டது. நீ புதிதாக சுத்தமானதாக பிறந்திருக்கிறாய். இன்றுமுதல் நீ 'சர்பத்' என்றழைக்கப்படுவாய். ஆமேன்... "
விழுந்துபொரண்டு சிரிச்ச காமெடி 😂😂😂

Monday, 13 June 2016

தமிழ் நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்த தினமும் கீழே கண்டவைகளைப் பற்றி பேசவேண்டும்
1)      மதுவிலக்கு
2)      ராஜீவ் கொலையாளி விடுதலை
3)      ஹிந்தி எதிர்ப்பு
4)      அவ்வப்போது சம்ஸ்கிருத எதிர்ப்பு
5)      முல்லை பெரியார் அணை
6)      ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அறிக்கை
7)      இளிச்சவாய் சினிமா ப்ரொடியுசர் ஆக்கப்பட்டால் கேஸ் போடுவது
8)      எல்லோரும் குடும்ப அரசியல் செய்துகொண்டு அடுத்த குடும்ப அரசியலை சாடுவது
9)      எல்லோரும் ஜாதி அரசியல் செய்துகொண்டு அடுத்த ஜாதி அரசியலை சாடுவது

10)   ADMK மந்திகள் மட்டும் காலில் விழுத்து கும்ம்பிடுவதாக நம்பிக்கோடு மற்ற கட்சிகளிலும் அதையே செய்வது.
நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்
1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.
2.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.
4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.
6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.
10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.
11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.
12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.
13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.