Sunday, 30 November 2014
எழுமிச்சையில் அடங்கி உள்ள சிட்ரிக் அமிலத்தின் நன்மைகள்..
எழுமிச்சையில் அடங்கி உள்ள சிட்ரிக் அமிலத்தின் நன்மைகள்.......வண்டிக்கு.. முன்னால கட்டி உட்டா வண்டி ரிப்பேர் ஆவாது..வீட்டு நிலைல கட்டி உட்டா பேயி பிசாசு வீட்டுக்குள்ள வராது..புது வண்டி எடுக்குறப்ப டயருக்கு அடில வெச்சா வண்டி ஆக்சிடென்ட் ஆவாம ஓடும்..வீடு கட்டுறதுக்கு முன்னால நாலா கீறி நாலு மூலைலயும் எரிஞ்சா வீட்டு வேலை சீக்கிரம் ஆவும்..கொஞ்சமா கீறி அதுக்குள்ள குங்குமம் வெச்சு ரோட்டுல போட்டுட்டா நம்மல புடிச்ச சனி ஓடிரும்..ஒரு துணில கட்டி கல்லா பெட்டிக்குள்ள போட்டுகிட்டா வியாபாரம் நல்லா நடக்கும்..இதே பலன் கொஞ்சம் கூடனும்னா சாத்துகுடிய வெச்சு ட்ரை பண்ணலாம்.
Thursday, 27 November 2014
அன்பே சிவம்
சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது.
தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார்.
அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார்.
தம்பி சொன்ன காரணம், ”இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.
அண்ணன் அதிலிருந்து ஒன்றை எனக்குத் தருவார்” என்று.
அண்ணன் அதிலிருந்து ஒன்றை எனக்குத் தருவார்” என்று.
அண்ணன் சொன்னார், ”உண்மைதான். ஆனால் தம்பி, தனக்கு வயிற்றுவலி என்று பொய்சொல்லி அந்தத் துண்டை திரும்பத் தருவான்” என்று.
பரஸ்பர அன்பே சகோதரத்துவத்தின் நிலையான சொத்து
Tuesday, 18 November 2014
Administration – Management
Administration –
Management
Administration என்பதை நிர்வாகம் என்றும் Management என்பதை
மேலாண்மை என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றை அவ்வப்போது
மாற்றி மாற்றிக் குறிப்பிடுகிறார்கள். இரண்டுக்குமிடையே சில அடிப்படை வேறுபாடுகள்
உண்டு.
Administration எனும்போது நிறுவனத்தின் உரிமையாளர்கள் அல்லது பங்குதாரர்களைக்
குறிக்கிறோம். அதாவது நிறுவனத்தில் முதலீடு செய்து லாபங்களை எடுத்துக் கொள்வது
நிர்வாகம். திட்டமிடுதல், கட்டுப்படுத்துதல் பட்ஜெட்டை
நிர்ணயித்தல், ஊழியர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
ஆகியவை நிர்வாகத்தைச் சேர்ந்தவை – அதாவது Administration.
Management எனப்படும் மேலாண்மைப் பிரிவில் உள்ள ஊழியர்கள் தங்கள் திறமைகளை நிறுவன
முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துபவர்கள். அதற்காக ஊதியம் பெறுவார்கள். பிற
ஊழியர்களை ஊக்கப்படுத்துதல், நிர்வாகம் எதிர்பார்க்கும்
விளைவுகளைக் கொண்டு வருவதற்கும் இவர்கள் முயல வேண்டும். சுருக்கமாக மேலாண்மை
என்பது நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் எளிய முறையில்
கூறுவதானால் ஒரு நிறுவனத்தின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும்
வரையறுப்பது Administration. அவற்றை நடைமுறைப்படுத்துவது Management.
SPELL
“Spell என்றால்
‘உச்சரி’ என்றுதானே அர்த்தம்? “The plans would spell disaster for the
economy’’ என்று ஒரு நாளிதழில் படித்தேனே!’’
இப்படிக்
கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Spell
என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு. அவற்றில் ‘விளைவாக’
என்பதும் ஒன்று. நாளிதழில் படித்த வாக்கியத்தின் பொருள்: “இந்தத் திட்டங்களின்
விளைவாகப் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பு உண்டாகும்”.
Spell என்பது
மேலே உள்ள இரண்டு அர்த்தங்களிலும் verb ஆகப்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை noun ஆகப்
பயன்படுத்தினால் அதற்கு வேறு சில அர்த்தங்கள் உண்டு.
‘வசியம்’
என்பது ஒரு அர்த்தம்.
He cast a spell on the
woman. He woke up from the magician’s spell.
ஒரு சிறிய
காலகட்டத்துக்கும் spell என்று
கூறுவதுண்டு. I want to take a break for a spell.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
The Tamil Hindu
நாமும் ஒருநாள் மாறுவோம்
உண்மைய சம்பவம்.....
ஜப்பானுக்கு சுற்றுலா சென்ற போது ரயிலில் நம்ம ஆள் ஒருவர் பயணம் செய்யும் போது பழக்க தோஷத்தில் எதிரே உள்ள சீட்டின் மீது கால் போட்டு சொகுசாக அமர்ந்த படி பயணம் செய்தார்.
இதை கண்ட ஓரு ஜப்பானியர் அவர் சீட்டை விட்டு எழுந்து வந்து உடனே நம்ம ஆளின் காலை சீட்டிலிருந்து எடுத்து தன் மடி மேல் வைத்து கொண்டார்.
நம் ஆளுக்கு ஒரு மாதரி ஆகி விட்டது, உடனே நம்ம ஆள் ஏன் இப்படி செய்தீர்கள் என்று
கேட்டார்.
கேட்டார்.
அதற்கு ஜப்பானியர் சொன்னார் நீங்கள் எங்கள் நாட்டின் சொத்தை அவமதிப்பது போல் கோவமாக இருந்தது.
இருந்தாலும் நீங்கள் எங்கள் நாட்டின் விருந்தினர் அதனால் உங்கள் செளகரியத்துக்காக என் மடிமேல் வைத்துக்கொண்டேன் என்று சொன்னார்.
நம்ம ஆள் கூனிக்குறுகி அவரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார்.
அதற்கு அந்த ஜப்பானியர் இங்கு மட்டுமல்ல உங்கள் நாட்டிற்கு சென்றாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு இடையூறு கொடுக்காமலும் நடந்து கொள்ளும்படி சிரித்த முகத்துடன் அறிவுறுத்தினார்.
இப்ப சொல்லுங்க நாம் ஏன் முன்னேற முடியவில்லை...??
Friday, 14 November 2014
காந்தியும், பெரியாரும் நமக்கு நல்லது செய்ய கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என நான் நினைக்கிறேன்
பெரியார்: சில
புரிதல்கள்
பகுத்தறிவு ஒரு
நெடும் பயணம்!
மானுட விடுதலை
அடிப்படையிலான தேசிய உருவாக்கம் முடிவற்றதொரு தொடர் போராட்டமே என்பதுபோல், பகுத்தறிவு வாதமும் முடிவற்ற மாற்றங்களைக் காலந்தோறும்
எதிர் கொள்ளும் என்பதை அவர் மனம்
கொண்டிருந்தார். “பகுத்தறிவு என்று சொல்வது மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவை
எவை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப்
பழக்கவழக்கங்கள் எனத் தள்ளப்படலாம்… அதுபோலத்தான், நமது பின்னோர்கள் என்னைக்
குறித்துக்கூட ஒருகாலத்தில்,
‘ராமசாமி
என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’என்றும் கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி: காலத்தின் சின்னம்” என்றார்
பெரியார்.
ஏன் எதிர்த்தார்?
கடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பனர்கள்
அனைத்தையும் ஒருசேர பெரியார் எதிர்த்தமைக்குக் காரணம், உருவாகி வந்த இந்திய தேசத்தில் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டோர்கள், பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்டவர்கள் சமமான குடியுரிமையைப் பெறுவதற்கு
இவை தடையாக உள்ளன என்பது பெரியாரின் புரிதலாகும். ஒரு தேசத்தின் அரசியல்
கட்டமைப்பில் சமமான, தற்சார்புடைய குடியுரிமைதான் அடித்தளம் என்று
அவர் கருதினார்.
கடவுளா, கல்லா?
மதம் சார்ந்த
தொன்மங்கள் (புராணக் கதைகள்) சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பெண்
களையும் இழிவுபடுத்தப் புனையப்பட்ட பொய்ம்மைகள், கற்பனைகள் என்ற
பெரியார், அவற்றைப் பகுத்தறிவு சார்ந்த விமர்சனத்துக்கு
உட்படுத்தினார். 1924-ல் வைக்கம் கோயிலில் உள்ள சிலையை, ‘துணி வெளுக்க உதவும் சாதாரணக் கல்’ என்று
விவரித்தார். இவ்வகை விமர்சனம்,
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
சுயமரியாதையை
மீளப்பெறுதல்
மாற்றம் என்பது
வரலாற்றில் தன்னிச்சையாக நிகழ்வதில்லை;
ஒருமுகப்பட்ட மனித முயற்சியை, தலையீட்டை அது வேண்டுகிறது. எனவே, கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்டோர் இப்போது
செயலாற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும். அதன்மூலம் இழந்துபோன சுயமரியாதையை மீளப்பெறுதல்
வேண்டும். சுயமரியாதையை
நாம் பெற்றுவிட்டால், சுதந்திரம்
கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைத்துவிடும்; மனிதனின்
பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பது பெரியாரின்
கருத்து.
யார் போராடுவது?
அநீதிக்கும்
அடிமைத்தனத்துக்கும் ஆளானவர்கள் சுயமரியாதையால் உந்தப்பட்டு, தாம் தமக்காகவே கிளர்ந்து எழும்போதுதான் விடுதலை
கிடைக்கும் என்பது பெரியாரின் நம்பிக்கை. பெண் விடுதலைக்காக ஆண்கள் மட்டுமே குரல்
கொடுப்பதை ஏற்காத அவர்,
பெண்கள்தான் அதற்கான அரசியலைத் தங்கள்
கையிலெடுத்துப் போராட வேண்டும் எனக் குறிப்பிடுவதைச் சான்றாகக் காட்டலாம்:
“எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா?” என்றார் பெரியார்.
பெரியாரின்
நவீனத்துவம்
தன்னுடைய சமத்துவம்
அடிப்படையிலான தேசியத் தேடலுக்குப் பயன்படாத,
இந்திய / தமிழ்ப் பழமை பெரியாரைப்
பரிதவிக்கச் செய்யவில்லை. மாறாக,
தன்னுடைய தேசியத் தேடலைப் பழமையிலிருந்து
விடுத்து, எதிர்காலத்தில் நிலைகொள்ள வைத்தார். “மாற்றம்
என்பது தவிர்க்க இயலாதது;
அதை யாராலும் தடுக்க முடியாது” என்பது
பெரியாரது உறுதியான நிலைப்பாடு.
பெரியாரின் மொழி
தேச உருவாக்கத்தின்
மையக் கூறான மொழிபற்றிய அவரது கருத்தும் இந்தப் பகுத்தறிவு வயப்பட்ட
விமர்சனத்துக்கு உட்பட்டதே. மொழி என்பது பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு ஏற்றதாக, சமதர்மம்,
சுதந்திரம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக அமைய
வேண்டும். துளசி ராமாயணம் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான நூல்களைப் படிக்கவே
இந்தி உதவும் என்ற வாதத்தை முன்வைத்து,
பெரியார் இந்தியைத் தாக்கினார்.
‘‘சொர்க்கத்துக்குப் போக இந்தி உதவலாம். ஆனால், அதற்குள் சொர்க்கம்
போய்விடும்’’ என்றார். இந்தியோடு ஒப்பிடுகையில் தமிழ் சிறந்தது என்றார். எனினும், அதிலும் குறைபாடு உண்டென்பதை சுட்டிக்காட்டத்
தவறவில்லை. பகுத்தறிவுத் தளத்திலிருந்து தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும்
என்பது அவரது கருத்தாக இருந்தது. “எனது பாஷை,
எனது தேசம், எனது மதம்
என்பதற்காகவோ, எனது பழைமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான்
பாராட்டுவதில்லை” என்றார்.
எல்லையற்ற தேசம்
தேசியம் என்பது ஒரு
தேடலே அன்றி, ஒரு முடிவான உருவாக்கம் அல்ல எனும் கருத்தின்
அடிப்படையில்தான், பெரியார் தான் தேடிய தேசத் துக்குப் புவியியல்
எல்லைகளைத் தெளிவாக வகுப்பதுபற்றி அதிக அக்கறை காட்டவில்லை. தாம் கருதியுள்ள
தேசத்தில் இந்தியா விலுள்ள சூத்திரர் எல்லோருக்கும் இடமுண்டு என்று தெரிவித்தார்.
வருணா சிரமத்தை மறுக்கும் ஜப்பானியரும்கூட பெரி யாருக்கு திராவிடர்களே. இவ்வாறாக, அவருடைய தேசம் மொழி, கலாச்சார அடிப்படையில் புவியியல் எல்லைகளை வகுக்க
மறுத்தது. எல்லைகளை மீறி ஒடுக்கப்பட்டோர் இணைந்து விடுதலை தேடுவதே அதன்கூறு!
எம்.எஸ்.எஸ்.
பாண்டியனின் ‘தேசியப் பழமைவாதத்தை மறுதலித்தல் பெரியாரின் அரசியல் கருத்தாடலில்
தேசம்’ கட்டுரையில் இருந்து...
|-தமிழில்: இராம சுந்தரம்|
Sunday, 9 November 2014
பெத்தமனம் பித்து
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.
அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
இந்த கதை உண்மையா என்பதைவிட இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்.. நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.. அவர்களை கண் போன்று பாதுகாப்போம்...
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.
அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.
""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
இந்த கதை உண்மையா என்பதைவிட இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்.. நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.. அவர்களை கண் போன்று பாதுகாப்போம்...
Subscribe to:
Posts (Atom)