Tuesday, 18 November 2014

Administration – Management


Administration – Management
Administration என்பதை நிர்வாகம் என்றும் Management என்பதை மேலாண்மை என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றை அவ்வப்போது மாற்றி மாற்றிக் குறிப்பிடுகிறார்கள். இரண்டுக்குமிடையே சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு.
Administration எனும்போது நிறுவனத்தின் உரிமையாளர்கள் அல்லது பங்குதாரர்களைக் குறிக்கிறோம். அதாவது நிறுவனத்தில் முதலீடு செய்து லாபங்களை எடுத்துக் கொள்வது நிர்வாகம். திட்டமிடுதல், கட்டுப்படுத்துதல் பட்ஜெட்டை நிர்ணயித்தல், ஊழியர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் ஆகியவை நிர்வாகத்தைச் சேர்ந்தவை – அதாவது Administration.

Management எனப்படும் மேலாண்மைப் பிரிவில் உள்ள ஊழியர்கள் தங்கள் திறமைகளை நிறுவன முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துபவர்கள். அதற்காக ஊதியம் பெறுவார்கள். பிற ஊழியர்களை ஊக்கப்படுத்துதல், நிர்வாகம் எதிர்பார்க்கும் விளைவுகளைக் கொண்டு வருவதற்கும் இவர்கள் முயல வேண்டும். சுருக்கமாக மேலாண்மை என்பது நிர்வாகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் எளிய முறையில் கூறுவதானால் ஒரு நிறுவனத்தின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் வரையறுப்பது Administration. அவற்றை நடைமுறைப்படுத்துவது Management.
SPELL
“Spell என்றால் ‘உச்சரி’ என்றுதானே அர்த்தம்? “The plans would spell disaster for the economy’’ என்று ஒரு நாளிதழில் படித்தேனே!’’
இப்படிக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Spell என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உண்டு. அவற்றில் ‘விளைவாக’ என்பதும் ஒன்று. நாளிதழில் படித்த வாக்கியத்தின் பொருள்: “இந்தத் திட்டங்களின் விளைவாகப் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பு உண்டாகும்”.
Spell என்பது மேலே உள்ள இரண்டு அர்த்தங்களிலும் verb ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை noun ஆகப் பயன்படுத்தினால் அதற்கு வேறு சில அர்த்தங்கள் உண்டு.
வசியம்’ என்பது ஒரு அர்த்தம்.
He cast a spell on the woman. He woke up from the magician’s spell.
ஒரு சிறிய காலகட்டத்துக்கும் spell என்று கூறுவதுண்டு. I want to take a break for a spell.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

The Tamil Hindu

No comments:

Post a Comment