எழுமிச்சையில் அடங்கி உள்ள சிட்ரிக் அமிலத்தின் நன்மைகள்.......வண்டிக்கு.. முன்னால கட்டி உட்டா வண்டி ரிப்பேர் ஆவாது..வீட்டு நிலைல கட்டி உட்டா பேயி பிசாசு வீட்டுக்குள்ள வராது..புது வண்டி எடுக்குறப்ப டயருக்கு அடில வெச்சா வண்டி ஆக்சிடென்ட் ஆவாம ஓடும்..வீடு கட்டுறதுக்கு முன்னால நாலா கீறி நாலு மூலைலயும் எரிஞ்சா வீட்டு வேலை சீக்கிரம் ஆவும்..கொஞ்சமா கீறி அதுக்குள்ள குங்குமம் வெச்சு ரோட்டுல போட்டுட்டா நம்மல புடிச்ச சனி ஓடிரும்..ஒரு துணில கட்டி கல்லா பெட்டிக்குள்ள போட்டுகிட்டா வியாபாரம் நல்லா நடக்கும்..இதே பலன் கொஞ்சம் கூடனும்னா சாத்துகுடிய வெச்சு ட்ரை பண்ணலாம்.
####################################
ஒரு சிறுவன் பரிசுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று, "டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா?" என்று கேட்டான். "இல்லை" என்றார் கடைக்காரர்.
அந்தச் சிறுவன் மறுநாளும் அதே கடைக்குச் சென்று, "டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா?" என்று கேட்டான். "இல்லை... இல்லை!" என்றார் கடைக்காரர் எரிச்சலாக.அவன் மூன்றாம் நாளும் அதே கடைக்குச் சென்று, டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா என்று கேட்க, கடுப்பானார் கடைக்காரர். "இல்லைன்னு எத்தனை தடவை சொல்றது? இன்னொரு தடவை வந்து கேட்டியானா, உன்னை அந்தத் தூணோடு சேர்த்துவெச்சுக் கயித்தால கட்டிப்போட்டுடுவேன்!" என்றார்.
அந்தப் பையன் அடுத்த நாளும் வந்தான். கடைக்காரர் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு, "என்ன?" என்றார். "உங்ககிட்டே கயிறு இருக்கா?" என்று கேட்டான் பையன்.
கடைக்காரர் சாந்தமாகி, "இல்லை தம்பி!" என்றார்.
பையன் அடுத்துக் கேட்டான்... "சரி, டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை இருக்கா?”
No comments:
Post a Comment