Friday, 27 February 2015

தற்போதைய கல்வி கற்றது கைமண் அளவா ?



ிலையை வடிவமைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்கையில், இவர் சீனாவில் புகழ்பெற்ற சோகுஷின்புட்சு(Sokushinbutsu) என்ற கலையை பயில்வித்த மாஸ்டர் லியுகுவான்(Master Liuquan) என்ற துறவியாய் இருக்கலாம் என யூகிக்கிறோம். இவர் இறப்பிற்கு பின், இவரது உடல் புத்தர் சிலைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது இவரே அமர்ந்த நிலையில் இறந்து புத்தர் சிலையை அமைக்க கூறியிருக்கலாம்.
எனினும் இதை உறுதி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டின் ஒரு பகுதியை மரபணு(DNA) சோதனைக்கு அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளனர். தற்போது ஹங்கேரி நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் இந்த புத்தர் சிலை, அங்குள்ள அருங்காட்சியகத்தில் மே மாதம் வரை கண்காட்சிக்கு வைக்கப்படும் என ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, 24 February 2015

அதுதான் என்னை வெற்றியடைய வைத்திருக்கிறது

ஓர் நிறுவனத்தின் தலைவருக்கு தனது தொழிலில் சுமார் ஒரு கோடி நஷ்டமாகி விட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அமர்ந்தார்.
அப்போது அங்கு வயதில் பெரியவர் ஒருவர், இவருக்கு அருகில் வந்து அமர்ந்து, சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு, "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு "தொழிலில் நஷ்டம். மனமுடைந்து விட்டேன்" என்றார்.
"எவ்வளவு ரூபாய் நஷ்டம்? "
"ஒரு கோடி ரூபாய்"
"ஓ அப்படியா, கவலைப் படாதீங்க, நான் யார் தெரியுமா?" என்று கூறி அந்த ஊரின் பிரபல பணக்காரர் பெயரை சொல்லி, "சரி ஒரு கோடி பணம் கிடைத்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்க, "ஆமாம் எல்லாம் சரியாகிவிடும்" என்றார் நிறுவனத் தலைவர்.
பின்பு அந்த பணக்காரர் செக் ஒன்றில் கையெழுத்திட்டு, "இது 2 கோடிக்கான செக். நீ கேட்டதைவிட அதிகமாகவே கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
பிறகு அந்த நிறுவனத் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்று, செக்கை பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின்பு அலுவலக ஊழியர்களை அழைத்து, ‘’நமது நிறுவனத்தில் ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 2 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதை களைந்து, நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
பணிகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டறியப்பட்டு களையப்பட்டன. அனைத்து ஊழியர்களையும் ஒத்துழைக்க வைத்தார். அவருடைய எண்ணங்கள், செயல்பாடுகள், திட்டமிடல்கள் எல்லாம் சரிந்துப்போன தொழிலை நிவர்த்தி செய்வதிலேயே இருந்தது.
ஒரு வருடம் கழித்து. அலுவலக கணக்குகள் அலசப்பட்டன. அந்நிறுவனம் 4 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது.
அடுத்த நாள், காலையில் அந்த செல்வந்தர் கொடுத்த 2 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். தூரத்தில் அந்த செல்வந்தரும் அவரது மனைவியும் வருவதைக் கண்டார். சில விநாடிகள் கழித்து பார்த்தால் அவரது மனைவி மட்டும் வருகிறார், அந்த செல்வந்தரை காணவில்லை.
நிறுவனத் தலைவர் அவரது மனைவியிடம், "மேடம் ஐயாவை எங்கே?’’ எனக் கேட்க, அவரது மனைவியோ பதட்டத்துடன், "ஐயோ உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்துவிட்டாரா?" எனக் கேட்டார்.
"இல்லம்மா, ஏன் அப்படி கேட்கிறீங்க?"
"இல்லை சார், அவர் மனநிலை சரி இல்லாதவர். தான் ஒரு பணக்காரன் என்றும், ‘செக்’ தருகிறேன் என்றும் சொல்லி இங்கு இருப்பவர்களிடம் போலியான செக்கில் கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்"
நிறுவன தலைவருக்கு ஒரு நிமிடம் எதுவும் பேச முடியவில்லை.
அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுதான் என்னை வெற்றியடைய வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து புன்முறுவலுடன் கிளம்பினார்..

Tuesday, 17 February 2015

நடைமுறைக்கு வந்தால் நல்லது

கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது. காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!!


 1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!! .மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதிது. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!! உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம். 

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!! உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும்.உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு... 

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய். பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்துள்ளால் உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உத வேண்டும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்க வேண்டும். 

5. எப்பவும் மனைவிய காதலிக்க வேண்டும். காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லை .. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வைத்துகொள் .. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டு பேரையும்... எப்பவும் இளமையா உணர வைக்கும்...!! 

மிக முக்கியம் உன் அப்பா என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!! உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துக்கள்....!!!