Sunday, 28 July 2013

நோய்களைப் போக்கும் உணவுகள்

நோய்களைப் போக்கும் உணவுகள்
வாதம்/பித்தம்/கபம்
இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம்
பித்தம்:
கைக்குத்தல் அரிசி நல்லது.  கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி
கபம்:
சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை.  கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்.
சளி / இருமல்:
சேர்க்கவேண்டியவை:  இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம்.  இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும்.  மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம்
காய்ச்சல்
இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி   வெதுவெதுப்பான நீர்  புளிப்பில்லாத பழச்சாறு
நிலவேம்புக் கஷாயம் மட்டும் மூன்று நாட்கள் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும்.  
குழந்தைகளுக்கு துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய்த்தூள் இவற்றை கஷாயமாக்கி 30 - 60 மில்லி இரண்டு வேளை நான்கு நாட்கள் கொடுக்கலாம்.  அஜீரணத்தைத் தொடர்ந்து வரும் காய்ச்சல் எனில், சீரகக் கஷாயம் இரு வேளை
 சிறுநீரக பாதிப்பு
சேர்க்கவேண்டியவை: தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.  பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான். சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் உணவுகளான வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களாவது சாப்பிடுவது அவசியம். பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது.  காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு நன்கு வேகவைத்து, நீரை வடித்துவிட்டு சாப்பிடுவது அதிக அளவு உப்புகள் உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.
ஆஸ்துமா அலர்ஜி
சேர்க்கவேண்டியவை: காலையில் பல் துலக்கியதும் 2 முதல் 3 டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பால் கலக்காத தேநீர். இரவில் நல்ல வீசிங் இருந்து சிரமப்படும்போது, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இந்த இலைகளை கொஞ்சம் எடுத்து கஷாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்து குடிக்கலாம்.  நெஞ்சில் சளி இலகுவாக வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். மாலையில் தேநீரோ / சுக்குக் கஷாயமோ எடுப்பது, இரவு சிரமத்தைக் குறைக்கும். மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.  
எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகுரச சாதம், இட்லி என ஏதாவது ஒன்றை சாப்பிடுவது நல்லது. மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலை போடுவது நல்லது.  
மலச்சிக்கல்
சேர்க்கவேண்டியவை: நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவேண்டும். மாலை வேளையில் 12 காய்ந்த திராட்சை கொடுப்பது நல்லது.  இரவு உணவில் ஒரு வாழைப்பழம் அல்லது சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம். வாழைத்தண்டு பச்சடி, பாசிப்பயறு சேர்த்து சமைத்த கீரை தினசரி உணவில் இடம்பெற வேண்டும். வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத முழுக் கோதுமை, கேழ்வரகு
சர்க்கரை நோய்
சேர்க்கவேண்டியவை: கத்தரிக்காய், கோவைக்காய், அவரைப்பிஞ்சு, வெண்டை, கொத்தவரை, டபுள் பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக் கீரை, கொத்துமல்லி, புதினா நல்லன் பலன் அளிக்கக்கூடியவை. சர்க்கரை அளவைக் குறைப்பதில் பலன் தரும் பாகற்காய்.  இனிப்பு குறைந்த நாருள்ள, துவர்ப்பு அதிகம் உள்ள பழங்கள் தினமும் சாப்பிடுவது அவசியம்.  கிரீன் டீ நல்லது.  தினசரி பாலுக்குப் பதில் மோர் சேர்க்கலாம். காலையில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்துமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீர் சாப்பிடலாம்.  சீரகத் தண்ணீர் ரொம்பவே நல்லது.  
வாரம் இரண்டு நாள் அரிசிச் சோறு, இரண்டு நாள் தினை அரிசிச் சோறு, இரண்டு நாள் வரகரிசிச் சோறு, ஒருநாள் மாப்பிள்ளைச்சம்பா அவல் என மதிய உணவும், இரவில் தினை ரவா உப்புமா/கேழ்வரகு அடை பாசிப்பயறுக் கூட்டுடன் சாப்பிடலாம்.  காலை உணவிற்கு கம்பு அடை, கைக்குத்தலரிசிப் பொங்கல், சிவப்பரிசி அவல் என அளவாக சாப்பிடுவது நல்லது. நவதானியக் கஞ்சி காலை உணவாகச் சாப்பிடுவது நல்ல
உயர் ரத்த அழுத்தம்
சேர்க்கவேண்டியவை: தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம்.  மதிய உணவில் 5 - 10 பூண்டுப்பற்கள், 50 கிராமுக்குக் குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.  வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம்.  எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.  
சீரகத்தை லேசாக வறுத்து அதை மூன்று நாட்கள் இஞ்சிச் சாறிலும், மூன்று நாட்கள் எலுமிச்சைச் சாறிலும் இன்னும் மூன்று நாட்கள் கரும்புச்சாறிலும் ஊறவைத்து உலர்த்திப் பொடித்துக்கொள்ளுங்கள்.  இந்த பொடியை காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம்.  கடைகளில் சீரக சூரணமாகவும் கிடைக்கும்.  வெந்தயத்தை தினமும் பொடித்து சப்பிடலாம்.  
மூட்டுவலி
சேர்க்கவேண்டியவை: தினசரி 40 நிமிட நடை.  15 நிமிட ஓய்வு.  30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரிய நமஸ்காரம், 4-5 யோகாசனங்கள் செய்யவேண்டும். கால்சியம் - கீரை நிறைந்த உணவுகள். ஒரு கப் பழத்துண்டுகள், ஒரு கப் மோர் சாப்பிடுவது நல்லது.  
ரத்த சோகை.  
சேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.  
எள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை.  கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம்.  கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம்.  கஞ்சியாகவும் குடிக்கலாம்.  பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் 

Wednesday, 24 July 2013

வாலி எனது எண்ண ஓட்டங்கள் 2

வாலி அவர்களிடம் ஒரு முறை நிருபர்கள் நீங்கள் கண்ணதாசனை காப்பியடித்து எழுதுகிரீகளே என்றதுக்கு அவர் அப்படியா கண்ணதாசன் போல் என் வரிகள் இருக்கின்றனவா அப்படியானால் அது எனக்குப் பெருமை தான்.  ஏனென்றால்
அவரைப் போல் எழுதுவது கடினம்.

உங்கள் சொல் என்னை காயப்படுத்தவில்லை. மாறாக என்னை பெருமைபடுத்துகின்றன என்றாராம்.

அதுபோல் வாலி எழுதிய நல்ல பாடல்களை பல நண்பர்கள் அவரிடமே சொல்லி இந்த கண்ணதாசன் பாடல் மிக நன்றாக இருக்கிறது என்பார்களாம்.


கண்ணதாசனும் பாடல்கள் எழுதி கொடுத்துவிட்டு, தயாரிப்பாளர்களிடம் எதற்கும் ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள் வாலி எங்கேயாவது இதுபோல் முன்பே எழுதியிருப்பார் என்பாராம்.

வாலி - எனது எண்ண ஓட்டங்கள் 1

கண்ணதாசன் இல்லாததே ஒரு வருத்தமாக இருக்கும். தற்போது வாலி அவர்களும் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. கம்பன் ஓட்டகூத்தர் காலத்தில் நான் இல்லை. ஆனால் கண்ணதாசன், வாலி காலத்தில் நானும் வாழ்ந்தது சந்தோஷம்.

இருவரையும் உணரக்கூடிய அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு இல்லையென்றாலும், சினிமா பாடல்கள் புரியும் அளவு தமிழ் படித்திருக்கிறேன். எனவே இரண்டு கண்ணும் தெரியாமல் போனதாக தோன்றுகிறது.

வாலி பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தருபவர்.
சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனிஎன்ற உ.சு.வா பாடலுக்கு, பல்லவி வரிக்கு முன் ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ பிரியப்பட, வாலி செஞ் சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனிஎன்று பல்லவியை ஒரு நொடியில் அழகாக்கி விட்டார்.

வாலிக்குப் பிடித்த பாடல் குறித்து, ஒரு பேட்டியில், ஒரு வரலாற்றைப் பதிவு செய்த வகையில் அமைந்த கண்ணதாசனின் நிலவைப் பார்த்து வானம் சொன்னது...பாடலை வாலி பிரமிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாடலில் வரும்

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னதுஎன்ற சரண வரிகளை நினைவு கூர்க!

வாலி கண்ணதாசன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தவர். சமீபத்தில் வாலி பற்றிய சந்தக்கவிதையாக எழுதப்பட்டதில் கண்ணதாசன் கொடி அகற்றி கண்ணதாசனை வென்றாய்என்பதை ஏற்றுக் கொள்ள வாலி ஒரேடியாக மறுத்து, பின்னர் அவ்வரிகள் கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்; கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்என்று மாற்றப்பட்டது.

கம்ப ராமாயணத்தில் ராமரை தேடிவந்து,  பரதன் அரசாள அழைக்கும் இடத்தில் குஹன் 1000  ராமன் உனக்கு ஈடு ஆகாது என்று சொன்னதாக பட்டிமன்றத்தில் கேட்டுயிருகிறேன்.

மேலே வாலி மறுத்ததாக சொல்லியிருப்பது  கண்ணதாசனை விட வாலி மேல் மதிப்பை அதிகரிக்க செய்கிறது. மேன் மக்கள் மேன் மக்களே.

Tuesday, 16 July 2013

அதுவம் அப்படியா

எனக்கு எங்கள் கம்பெனி vice president ஐ பார்க்கும் போது அவருடைய கடுமையான முன்னேற்றம் பெரியதாகத் தோன்றும். ஆரம்பத்தில் சாதரணமாக ஆபீஸ் பாயாக சேர்ந்து படிப் படியாக வளர்ந்து இன்றைக்கு vice president ஆகா வளர்த்துயிருக்கிறார். இத்தனைக்கும் அவருடைய அப்பா  chairman com president முயற்சி இல்லாமலே என்றல் பார்த்துக்கொள்ளுங்களேன்

Saturday, 13 July 2013

100-மெகாபிக்சல்

சீன நிறுவனம் ஒன்று 100-மெகாபிக்சல் கொண்ட கேமராவை உருவாக்கியுள்ளது. ஐ.ஓ.ஈ 3 – கேன்பன் கேமரா (IOE3-Kanban camera), சைனீஸ் அகடமி ஆஃப் சயின்சஸ்-ன் கீழ் இயங்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆப்டிக்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கேமரா, வான்வழி மேப்பிங் (aerial mapping), பேரழிவு கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை போன்ற துறைகளில் உயர் தெளிவுத்திறன் படம் (high-resolution imaging) எடுக்க உபயோகிக்கப் படுகிறது.
இந்த கேமரா 10,240×10,240 (10,240 x 10,240 pixels) பிக்சல்கள் (pixels-படப்புள்ளி) அளவிலான புகைப்படங்கள் எடுக்கும் திறன் கொண்டது.
இது மிகவும் சிறியதாகவும், எடை குறைந்ததாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. -20 டிகிரி செண்டிக்ரேட் முதல் +55 டிகிரி செண்டிக்ரேட் வரை எந்த வித வெப்பநிலையிலும் இயங்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த கேமரா, உயர் தெளிவுத்திறன் உள்ள படம் எடுக்கும் திறன் கொண்டுள்ளதாலும், உயர் உணர்திறன் (high sensitivity) மற்றும் உயர் டைனமிக் (high dynamic range (HDR)) அம்சங்கள் கொண்டுள்ளதாலும், வான்வழி மேப்பிங், நகர திட்டமிடல், பேரழிவு கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் துறைகளில், பிரயோகிக்கவல்லது.

2001-2005-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், இதே நிறுவனம் 81 மெகாபிக்சல் கேமராஒன்றையும் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 11 July 2013

வடை போச்சே

புதுடில்லி :கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நீதிபதிகள், ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,க்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, 8 (4), அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே, இந்த சட்டப் பிரிவு செல்லாது.
கிரிமினல் வழக்குகளில், எந்த மக்கள் பிரதிநிதிக்காவது தண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே, அவரின், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவிகள் பறிக்கப்படும். ஆனாலும், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ளவர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.இந்த விவகாரத்தில், சாதாரண மக்களுக்கு ஒரு நீதியும், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நீதியும் பின்பற்றப்படுவது சரியல்ல.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றாலும், 

அதை எதிர்த்து, மேல் முறையீடு செய்து, தொடர்ந்து பதவி சுகத்தை அனுபவிக்க முடியாத நிலை, மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவு, இனிமேல் சிக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் பொருந்தும் என்பதால், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு, இப்போதைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இனிமேல், எந்த வழக்கிலாவது, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிகள் பறிபோவது, உறுதியாகியுள்ளது.