Wednesday, 24 July 2013

வாலி - எனது எண்ண ஓட்டங்கள் 1

கண்ணதாசன் இல்லாததே ஒரு வருத்தமாக இருக்கும். தற்போது வாலி அவர்களும் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. கம்பன் ஓட்டகூத்தர் காலத்தில் நான் இல்லை. ஆனால் கண்ணதாசன், வாலி காலத்தில் நானும் வாழ்ந்தது சந்தோஷம்.

இருவரையும் உணரக்கூடிய அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு இல்லையென்றாலும், சினிமா பாடல்கள் புரியும் அளவு தமிழ் படித்திருக்கிறேன். எனவே இரண்டு கண்ணும் தெரியாமல் போனதாக தோன்றுகிறது.

வாலி பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தருபவர்.
சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனிஎன்ற உ.சு.வா பாடலுக்கு, பல்லவி வரிக்கு முன் ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ பிரியப்பட, வாலி செஞ் சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனிஎன்று பல்லவியை ஒரு நொடியில் அழகாக்கி விட்டார்.

வாலிக்குப் பிடித்த பாடல் குறித்து, ஒரு பேட்டியில், ஒரு வரலாற்றைப் பதிவு செய்த வகையில் அமைந்த கண்ணதாசனின் நிலவைப் பார்த்து வானம் சொன்னது...பாடலை வாலி பிரமிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாடலில் வரும்

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னதுஎன்ற சரண வரிகளை நினைவு கூர்க!

வாலி கண்ணதாசன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தவர். சமீபத்தில் வாலி பற்றிய சந்தக்கவிதையாக எழுதப்பட்டதில் கண்ணதாசன் கொடி அகற்றி கண்ணதாசனை வென்றாய்என்பதை ஏற்றுக் கொள்ள வாலி ஒரேடியாக மறுத்து, பின்னர் அவ்வரிகள் கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்; கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்என்று மாற்றப்பட்டது.

கம்ப ராமாயணத்தில் ராமரை தேடிவந்து,  பரதன் அரசாள அழைக்கும் இடத்தில் குஹன் 1000  ராமன் உனக்கு ஈடு ஆகாது என்று சொன்னதாக பட்டிமன்றத்தில் கேட்டுயிருகிறேன்.

மேலே வாலி மறுத்ததாக சொல்லியிருப்பது  கண்ணதாசனை விட வாலி மேல் மதிப்பை அதிகரிக்க செய்கிறது. மேன் மக்கள் மேன் மக்களே.

No comments:

Post a Comment