v
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்..ஆனால் வளர்ந்த பிறகு
குழந்தையாகவே நீண்ட காலம்
இருக்கிறான்.!
இருக்கிறான்.!
v
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான், பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும்
இழக்கிறான்..
v
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை
மறந்துவிடுகிறான்.நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
v
சாகாமல் இருக்க வாழ்கிறான், ஆனால் வாழாமலே சாகிறான்!
v
யாரும் தன்னை
நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே,
v
நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில் தான் அந்த மதிப்பிருக்கு..
v
ஒண்ணைவிடஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
v எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே, உண்மையில் யாருக்கு தேவை
குறைவோ அவன் தான் பணக்காரன்!
v
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல
ஆண்டுகள் ஆகும். நம்மை
நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பது தான் நிஜம்…
v
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு, சந்தோஷத்தை
ஒருபோதும் வாங்க முடியாது..
v
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும்
விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்..
v
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும், எந்த சூழலிலும்
அவனை விரும்புவதுமே!
v
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே
மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்..
v நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம், நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை
ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
very nice keep it up
ReplyDelete