Saturday, 5 October 2013

ஓட்டை அப்பம் வீட்டை சுடும்.

ஜூ வி 09.10.2013

BSNL தவறை வெளிக்கொண்டு வந்தவர் தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேள​னத்தின் (பி.எஸ்.என்.எல்) பொதுச்செயலாளர் சி.கே.மதிவாணன். அவரிடம் பேசினோம்.

''பி.எஸ்.என்.எல். இணைப்புகளை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தை நீங்கள்தானே முதலில் வெளிக்கொண்டு வந்தீர்கள்?''

''தயாநிதி மாறன் செய்த தவறை நானோ, தொலைத் தொடர்புத் துறை தொழிற்சங்கங்களோ, ஊடகங்களோ முதலில் வெளிக்கொண்டு வரவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பச் சண்டையும் தயாநிதி மாறன் மற்றும் ஆ.ராசாவுக்கு இடையே ஏற்பட்ட ஈகோதான் இந்த விவகாரம் வெளியில் வந்ததற்கு மிக முக்கியக் காரணம்.  

2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். அப்போது மாறனின் சகோதரர்களுக்கும் அழகிரிக்கும் மோதல் ஏற்பட்டு, குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது.அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அழகிரியின் பக்கம் நின்றதோடு, தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை காலி செய்தார். அந்த இடத்தில் அமைச்சராக ஆ.ராசா உட்காரவைக்கப்பட்டார். அதன்பிறகு தயாநிதி, ஆ.ராசா மோதலாக இது மாறியது.

ஆ.ராசா காலத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் அதன்பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அதற்குப் பதிலடி கொடுக்க நினைத்த ஆ.ராசா, தயாநிதி மாறனின் வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை அம்பலப்படுத்தினார். 


எனவே, நடந்த தவறுகளைக் கண்டுபிடித்து ஒருவரை மாற்றி ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டது அவர்கள்தானே தவிர வேறு யாரும் அல்ல!''


No comments:

Post a Comment