Sunday, 6 October 2013

சைனா (மேலோட்டமாக படிக்க கலர் எழுத்துக்களை மட்டும் படிக்கலாம்)

சீனரின் பட்டு உற்பத்தியானது மிக முக்கியமான சாதனை.
சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.
இந்தச் சூழலில் ஜப்பானியர்கள் வெகு சாமர்த்தியமாகபட்டு நூல் வளர்க்கத் தெரிந்தநான்கு சீனப் பெண்மணிகளைக் கடத்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஜப்பானியர்கள் அவர்கள் மூலமாகபட்டு நூல் வளர்ப்பைத் துவக்கி, அதன் உற்பத்தியில் மேம்பாடு கண்டு சீனாவின் உற்பத்தியை விடப்பன்மடங்கு உற்பத்தி செய்யஆரம்பித்து விட்டார்களாம். ஆனால், சீனர்களுக்கு அபிவிருத்தி செய்யத் தெரிந்து இருக்கவில்லையாம்.அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

மட்பாண்டங்கள் பீங்கான்கள் தயாரிப்பில் சீன குவாங்கோ மக்கள் பிரசித்தி பெற்று விளங்கினர். இவர்கள் தமது தேவைகளுக்காகவும் ஏற்றுமதிக்காகவும் இவற்றை தயாரித்தனர்.
சீன மொழி எழுத்துக்கள் கி.மு.16ம் நூற்றாண்டின் தொகுதியான எழுத்துக்களாக உருவாகின.
சீன மொழி எழுத்துக்கள் உருவான பின் அண்டை நாடுகளில் அவை ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தின. ஜப்பான், வியட்நாம், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் எழுத்துக்கள் சீன மொழி எழுத்துக்களின் அடிப்படையில் உருவானவை.
காகித உட்பத்தி சீனரின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே.
ஆனால் கி.பி. 751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும், பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று, காகிதம் தயாரிக்கும் கலை படிப்படியாக அரபு உலகம் முழுவதிலும் பரவியது. ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்தக் கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். காகிதத்தில் பயன்பாடு உலகெங்கும் படிப்படியாகப் பரவியது.
11ஆம் நூற்றாண்டில் ச்சென் குவா (Shen Gua) எனும் புகழ்பெற்ற எழுத்தாளர் பை செங் (Bi Sheng) என்ற பெயர் கொண்ட ஒருவர் நகரும் அச்சுகளைக்கொண்டு அச்சிடும் கண்டுபிடிப்பு செய்தது பற்றி பதிவு செய்துள்ளார். இந்த படைப்பே இறுதியில் மேற்கு உலகம் தம் கையில் எடுத்துக்கொள்ள குட்டன்பர்க் என்பவரால் பைபிளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது.
பண்டைய சீன சிங் வம்சத்திற்கு (கி.மு 1644-1911) முன் சீனாவில் கண்ணாடி உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் சீனாவில் கண்ணாடி தயாரிப்பில் முந்தைய தொல்பொருள் ஆதாரம் பின்னர் வந்த சவ் அரசகுலத்திலிருந்து (கி.மு1046 221BC) வருகிறது. மட்பாண்டப்பொருள்கள் மற்றும் உலோக வேலைப்பாடுகளை ஒப்பிடும் போது சீன வரலாற்றில் கண்ணாடி கலை மற்றும் கைவினை ஒரு பெரும் பங்கை பெற்றுள்ளது.
ஹான் திபெத் மங்கோலியா உள்ளிட வெவ்வேறு சீன இனக்குழுக்கள் பயன்படுத்தும் எல்லா மருந்துகளுக்கும் சீன மருத்துவம் என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இனக்குழுக்களிடையே ஹான் இனம் பயன்படுத்தும் மருந்துதான் சீனாவிலும் உலகம் முழுவதிலும் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது. ஹான் இனம் தான் முதன் முதலில் தனக்கென ஒரு மருத்துவ முறையை உருவாக்கியது. 19ம் நூற்றாண்டில் மேற்கத்திய மருத்தும் பிரபலமடைந்தது போல ஹான் மருத்துவம் கீழை நாடுகளில் பிரபலமானது. சீனாவின் தேசிய இனங்கள் உருவாக்கிய பல்வேறு மருத்துவ முறைகளில் ஹான் இனம் உருவாக்கிய மருத்துவ முறைதான் மிகவும் பழமையானது. நடைமுறைப் பயன்பாட்டிலும் கோட்பாட்டு அறிவிலும் வளம் மிக்கது.
சீனரின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக விளங்குவது அவர்களின் கட்டிடக்கலை ஆகும். சீனரின் கட்டிடக்கலை என்னும் போது சீனப்பெருஞ்சுவராகும்.கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர்.

சீனர்கள் சமய நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் பல தெய்வங்களை வணங்கினர் என்று கூற முடியது. அவர்கள் ஆதி காலம் தொட்டு தனிக்கடவுள் உண்டு என்ற கொள்கை கொண்டிருந்தனர். கி.மு 6ம் நூற்றாண்டில் கன்பூசிய மதமும் தேயோ மதமும் பரவின. பின்னர் இவ்விரு மதங்களும் செல்வாக்கு இழந்து பௌத்த மதம் வளர்ச்சி பெற்றது. சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றி பேசும் போது, ஒருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தான் கம்பியூசியஸ். சீன மக்களை பொறுத்தவரையில் கம்பியூசியஸின் செல்வாக்கு முதலிடம் வகிக்கின்றது. கம்பியூசியஸ் சீனாவின் கம்பியூசியஸ் தத்துவத்தை உருவாக்கியவர். உண்மையில் கம்பியூசியஸ் தத்துவம் சீனாவின் பழங்கால தத்துவ இயல் குழுக்களில் ஒன்றாகும். அது ஒரு தத்துவச் சிந்தனையாகும். மதச் சிந்தனை அல்ல. 

No comments:

Post a Comment