இந்த இரண்டு அரசி வகைகளும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
உணவு முறை
இரண்டையும் சம அளவில் கலந்து உலர்த்த மவுவாக அறைதுவைதுக்கொண்டு
நாம் எல்லா வகை உணவிலும் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கலந்து சபிட்டுவறலாம். மேலும் வாரம் ஒருமுறை சந்தையில் கிடைக்கும்
ஏதோவொரு காளனையும் சேர்த்துக் கொள்ளம்.
கறுப்பு அரிசி 'கவுனி அரிசி
சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் ஆகிய கொடிய
நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல்... கறுப்பு அரிசிக்கு உண்டு என்பது தற்போது
நிரூபிக்கப்பட்டு வருகிறது இன்றைய மருத்துவ, விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
வழக்கமாக உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்கள் தவிர, அபரிமித மான நார்ச்சத்து
(Fibre) இருக்கிறது.
இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்
சத்து, பாஸ்பரஸ்
போன்ற கனிமங்களும், 'பி’ வைட்டமின்கள்
அத்தனையும், வைட்டமின்
'ஏ’, 'இ’ போன்றவையும், உடலுக்கு
அத்தியாவசியமாகத் தேவைப்படும் 8 அமினோ அமிலங்களும் (Essential Amino Acids)கறுப்பு
அரிசியில் நிறைந்துள்ளன. 'ஆர்ஜினைன்’ என்ற
அமினோ அமிலம், 'நைட்ரிக்
ஆக்ஸைடு’ என்கிற
வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. மெல்லிய ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும்
ஆற்றல் இதற்கு உண்டு. இதுவே இதய பாதுகாப்புக்கும், ஆண்மைக்கும்
முக்கிய காரணங்களுள் ஒன்று.
'ஆன்த்தோசயனின்' (Anthocyanin) என்கிற
வேதிப்பொருள், இந்த
அரிசியின் கறுப்பு நிறத்துக்குக் காரணம். இது ஓர் அற்புதமான 'ஆன்டி - ஆக்ஸிடென்ட்' (Antioxidant).. இதய
வியாதிகள் முதல் சிறுநீரக வியாதி,
மூளை பாதிப்புகள்,
புற்றுநோய் வகைகள் எல்லாமே... பிராணவாயுவின் சிதைந்த பொருட்களால் (oxygen free radicals) விளையும்
கேடுகள் என்று கருதப்படுகின்றன. இதற்கு எதிராகச் செயல்படும் ஆன்டி - ஆக்ஸிடென்ட்கள், தற்போது மருத்துவ உலகில்
பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கறுப்பு அரிசியின் 'ஆன்த்தோசயனின்' இதற்குப் பெரிதும்
உதவுகிறது.
குறிப்பாக, 'சிறுநீரக
வியாதிகள், அல்ஸைமர்
போன்ற மூளை பாதிப்புகள், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய பாதிப்புகளை கறுப்பு
அரிசியால் தடுக்க முடியும்' என்று
விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.
பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள்
அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும்
அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய
வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ்
போன்ற கனிமங்கள் - மிகுதியான
நார்ச்சத்து (Fibre) என
சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி
ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற
வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்
திருக்கின்றன.
இதையெல்லாம்விட, சிவப்பு
அரிசியில் மானோகோலின் - கே (Monacolin
K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில்
இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற
பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி
செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல்
மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று
இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை
நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு
அரிசி நல்ல மருந்து.
No comments:
Post a Comment