Saturday, 30 March 2013

உங்களுக்கு கோபம் வருகிறதா


நியுயார்க் ஏர்போர்ட்டில் லக்கேஜ் செக்கின் செய்யும் இடத்தில கோபப்பட்ட பயணி,  வேலை செய்யும் நபரை,  மிகவும் மோசமாகத்  திட்டிகொண்டிருந்தார்.

அவர் நகர்ந்த பின் அடுத்து வந்த பயணி,  ஏன் சார் நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களை இந்தத் திட்டு திட்டுகிரரே உங்களுக்கு கோபம் வரவில்லையா என்றார்

அதற்கு பணியாள் அவர் லண்டன் போகிறார், அவர் லேக்கேஜ்  பாரிஸ் போகிறது என்றார்/


*********************************

ஒரு புரொபசர் சிம்பன்சி குரங்கு வளர்த்து, அது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்துவந்தார். சிம்பன்சி எப்படி யோசிக்கிறது என்று பார்க்க அதை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். அது விளையாட நிறைய போம்மைகளை வைத்தார்.  பிறகு அது என்ன செயட்கிறது என்று பார்க்க சாவி துவாரத்தின் வழியே பார்த்தார்.

அப்படிப் பார்த்த போது அதே சாவி துவாரத்தின் வழியே சிம்பன்சி குரங்கின் கண்கள் தெரிந்தன.

(சிம்பன்சி நம்மை உள்ளே வைத்து பூட்டிவிட்டு நம்ம புரொபசர் என்ன செய்கிறார் என்று பார்த்துக்கொண்டு இருந்தது)


**********************************
மெசபடோமியா நாகரித்தைச் சேர்ந்த சுமேரியன், அக்காடியன், இயேசு கிறிஸ்துவின் தாய்மொழியான அர்மைக், பண்டைய எகிப்து கலாச்சாரமொழியான எகிப்தியன் ஆகியவை முற்றிலுமாக வழக்கத்திலிருந்து அழிந்துவிட்டன.


தமிழுக்கு வயது ஐயாயிரம் இருக்கலாம். திராவிட மொழிகளின் ஆதிமொழி தமிழ்.

இதிலிருந்து பிறந்த ஏராளமான மொழிகள் இன்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேசப்படுகின்றன.


தமிழின் துணைமொழிகளுள் ஒன்றான ப்ராஹூ’, இப்போதும் பாகிஸ்தானின் பலுசிஸ்தானத்தில் பேசப்படும் மொழி. வட இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கோலமி, கோண்டி ஆகியவையும் இதே போன்றுதான்

No comments:

Post a Comment