விஸ்வரூபம் தடுப்பது என்று முஸ்லிம் பெருமக்கள் டிவியில் பேசியதை
பார்க்கும்போது
பத்து அல்லது பதினைந்து கட்சிகளை நீக்கவேண்டும் என்று சொல்லாமல்
ஒவ்வொரு கட்சியாக விலாவரியாக அவர்களே விளக்கிச்சொல்லி சினிமா பார்க்காமல் இருப்பவர்களுக்கும்
எடுத்து சொல்லிவிட்டார்கள். இனி படத்தை
தடுத்தாலும் இவர்கள் கற்பனையாக கவலைப்படும் கட்சிகளை இவர்களே எல்லோர் மத்திலும் வலிமையாக பதியவைத்துவிட்டர்கள்.
இப்படி நடந்துதிருக்காவிடில் இவர்கள் எடுத்துக்காட்டிய கட்சிகள் எல்லோர்மனதிலும் ஓகோ
இதை இப்படித்தான் மாற்றி புரிந்துகொள்ள வேண்டுமோ என நினைத்திருக்க மாட்டர்கள்’
எனக்கு என்னவோ மூன்று வயது குழந்தையிடம் வீட்டுக்கு வந்த உறவினரை
காட்டி இதுதான் மாமா மாமி என்று சொல்லும்போது குழந்தை போட்டுருக்கும் கவுனை தூக்கி
முகத்தை மூடிக்கொள்வது போல் படத்தை மறுப்பவர்கள் செய்துவிட்டார்கள்.
கடைசியாக விஸ்வரூபம் சந்தர்ப்பத்தில் சன் டிவி, புதிய தலைமுறை டிவி போன்ற
டிவிகளை உபயோகப்படுத்தி வாடகைக்கு வீடு பிடிக்க முயற்சி செய்தர்கள்.
ஜாதி அரசியல்வாதிகள் போல் இவர்கள் மத அரசியல்வாதிகள். இவர்களை நாம்
ஒதுக்கி விடுவோம். நாம் சாதாரன மக்கள் நாம் எப்பவும் போல் மாமன் மச்சான்களாக
இருப்போம்.
இஸ்லாமிய மதத்திலும் நல்ல கதைகள் கவிதைகள் நல்ல புத்திமதிகள்
இருக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்வோம். நம் நல்ல சங்கதிகளை சொல்லிக்கொடுப்போம்.
மெய்யப்பன்
No comments:
Post a Comment