Monday, 30 September 2013

இன்று மாலை நேரம் 1

ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த பெண்ணால் ரங்கனுக்கு விடுதலை. அங்கே கைங்கர்யம் செய்தவர்கள் இனி அவர்கள் இஷ்ட்டத்துக்கு கருவறையை மூடிக்கொண்டிருக்க முடியாது. ஜெயலலிதா ஆடரால் கோயில் தொடர்ந்து திறந்திருக்கிறது. அம்மணிக்குப் புண்யம்.
திருவானைக்கோவிலிலும் சன்னததி வரைக்கும் ப்ரீயாக சென்று தரிசனம் செய்ய முடிகிறது.
அங்கே இருந்த நபர்களிடம் ஏன் இந்த மாற்றம் என்று கேட்ட சமயம் இது மேலிடத்து உத்தரவு என்றும் மேலும் கேட்காமலேயே  மறு உத்திரவு வரும்வரையில் என்றார்கள்.
அவர் பாடி லாங்குவேஜ், அவர்கள் பழையமுறை விரும்புவது போலிருந்தது.
இந்த அமைப்பு நன்றாக இருக்கிறது. ரங்கனும் பக்தர்களும் கொடுத்து வைத்திருந்தால் இது தொடரும்.
அல்லது அதிகாரிகளுக்கும் ஐயர்களுக்கும் இது பிடிக்காமல் அம்மாவை திசை திருப்பினால் மறுபடி ஸ்ரீரங்கனை பூட்டிவைத்துக்கொள்வார்கள்

No comments:

Post a Comment