Friday, 10 October 2014

மக்கள் பிரதிநிதியில் எந்தமாற்றமும் தெரிகிறதா 1000 வருஷமாக

மக்கள் பிரதிநிதியில் எந்தமாற்றமும் தெரிகிறதா 1000 வருஷமாக

http://tamizarvaralaru.blogspot.in/2013/08/blog-post_8.html

குடவோலை முறை உத்திரமேரூர் – கோ ஜெயகுமார்

தேர்தலில் நிற்க

யார் யார் தகுதியற்றவர் என்றும் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்கமுடியாது.
இவர் மட்டுமல்ல இவரது மகன், பெயரன், தந்தைவழி, தாய்வழி, மகளையோ; மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவர் வழியில் எந்தவிதமான சொந்தக்காரர்களும் தேர்தலில் நிற்க முடியாது.
தான் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டு பின் தனது சொந்தக்காரர் யாரையும் ஆட்சியில் அமர்த்திவிட முடியாது. இதைக் கல்வெட்டு வாசகத்திலேயே காண்போம்.
பொதுச் சொத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தன் சொத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும் என்பது கருத்து.
இல்லையெனில் அவனது இருவழிச் சொந்தக்காரர்களும் எப்பொழுதும் தேர்தலில் நிற்க முடியாது எனக் கடுமையான விதி ஏற்படுத்தப்பட்டது.
இது மட்டுமல்ல கள் சாராயம் குடிப்பவன், பிறர் பொருள் அபகரித்தவன், பிறர் மனைவியை அபகரித்தவன், முதலியோர் நிற்க முடியாது.
இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தூய்மையானவர் என்று சாதிப்பவர்களும் நிற்க முடியாது. இவற்றிற்காகத் தண்டனை பெற்று வெளிப்போந்த பின்னரும் நிற்கமுடியாது.
ஊரில் மாய்மாலம் செய்தல், பேசியே ஏமாற்றுபவர்கள் எல்லாம் நிற்க முடியாது. இவர்களைச் சாஹஸம் செய்வோர் என்று கல்வெட்டு கூறுகிறது.
யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தேர்தலில் நிற்கமுடியாது.
சாஹஸியராயிருப்பான் பரதிரவியம் அபஹரித்தான் எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்

இக்காலத்தில் "பேட்டை ரெளடி" என்பதை அக்காலத்தில் "கிராம கண்டகன்" என்று கூறினர். "கண்டகம்" என்றால் முள் என்று பொருள். முள் போல் ஊருக்கு துன்பம் இழைப்பவன் கிராம கண்டகன் மட்டுமல்ல அவனுக்கு பாதுகாப்பு அளிப்பவனும் நிற்க முடியாது என்பது "கிராம கண்டகனாய் பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான்" கல்வெட்டில் உள்ள வாசகம். "ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் நீக்கி" பிற தகுதி உடையோர் பெயரிட்டுத் தேரந்தெடுத்தல் வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

குடவோலை முறை உத்திரமேரூர் – கோ ஜெயகுமார்

No comments:

Post a Comment