Thursday, 13 February 2014

என்னத்த சொல்ல

 பாரசீக துவைத மதங்களான மித்ரைஸம், ஜராதுஷ்டிரனிஸம் ஆகியவற்றினால் பாதிப்பு கொண்டு உருவான ஆரம்பகட்ட யூத நம்பிக்கைகள் சிரியா வழியாக ஐரோப்பாவில் ஊடுருவி நாஸ்டிக் நம்பிக்கைகளை உருவாக்கின என்றும் சொல்லபப்டுகிறது. இவர்களின் மதப்படிமங்களில் இச்செல்வாக்கு வெளிப்படையாகவே உள்ளது. கிபி இரண்டாம் நூற்றண்டில் நாஸ்டிக் அறிஞர்கள் பிளேட்டோவின் இலட்சியக் கருத்துமுதல்வாத நோக்குகளை ஆரம்பகட்ட கிறித்தவ மதக் கொட்பாடுகளுடன் இணைத்து தங்கள் கொள்கைகளை விரிவாக்கம் செய்ததாக தெரிகிறது. இதில் இரண்டாம் நூற்றண்டு நாஸ்டிக் அறிஞர்களான வாலண்டினியஸ் மற்றும் அவரது மாணவரான டாலமீனியஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் கோட்பாடுகள் தனி மத அமைப்புகளாக மாறின. இரண்டாம் நூற்றாண்டில் ரோமாபுரி கத்தோலிக்க மதத்தில்கூட இவர்களின் செல்வாக்கு இருந்திருக்கிறது. 


No comments:

Post a Comment