இன்று அமைதியின் தூதுவனாக அறியப்படும் நெல்சன் மண்டேலா, முன்னொரு காலத்தில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக எத்தியோப்பியா சென்று ஆயுதம் செய்யவும் குண்டுகள் தயாரிக்கவும் பயின்றவர். கெரில்லா பயிற்சியையும் கற்றுக்கொண்டவர்.
அதனால் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டபோதே மண்டேலா, 'அனைவரின் சமத்துவத்துக்குக்காக, சமூக நல்லிணக்கத்துக்காக, ஜனநாயத்துக்காகப் போராடினேன். இது குற்றம் என்றால் என்னை இப்போதே கொல்லலாம்’ என்றார். நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டு சிறைத் தண்டனையைப் பரிசாகக் கொடுத்தது. இருண்ட சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாலும் அவர் விதைத்த ஒருமைப்பாட்டு வெளிச்சம் மங்கிவிடவில்லை.
நீண்டநெடிய காலம் சிறையில் இருந்த தலைவர் என்ற பெயரோடு வெளியேறி வந்து, கறுப்பின மக்களின் முதல் ஜனாதிபதி ஆனார். அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் அவரை முன்மொழிந்தபோது, 'இது எனக்கான நிரந்தர இடமில்லை. எனக்குப் பின்னால் திறமையானவர்கள் இருக்கிறார்கள். புதிய தலைவர்கள் வளர முட்டுக்கட்டையாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்’ என்று ஜனாதிபதி பதவியைத் தூக்கி எறிந்தார்.
No comments:
Post a Comment