தண்டனைக்காக
ஆள் இல்லா தீவில் இறக்கிவிடப்பட்டு பல காலம் வருந்திய இரண்டு திருடர்கள் முன்னால்
ஒரு பாட்டில் கிடைத்தது அதை திறந்த போது ஒரு பூதம் வெளிப்பட்டு விடுவித்ததுக்கு நன்றி
கூறி என்ன வரம் வேண்டுமென்றது.
முதல்
திருடன்: எனக்கு கும்பத்துமேல் ரெம்ப
பிரியம் என்னை கொண்டுபோய் அவர்களுடன் சேர்த்துவிடு என்றது. பூதம் அதை செய்துவிட்டு
மீண்டும் இரண்டாம் திருடனிடம் வந்து என்ன வேண்டும் என்று கேட்டது.
இரண்டாம்
திருடன்: எனக்கு நண்பர்கள்,குடும்பம்
ஏதுமில்லை. நீ கொண்டுபோய்விட்டவன் தான்
எல்லாம். அவனை திருப்பி கொண்டுவந்து
சேர்த்துவிடு என்றான்.
பூதம்
அப்படியே செய்துவிட்டு மறைந்த்தது.
No comments:
Post a Comment